தீபாவளி ஸ்பெஷல் - தினம் ஒரு மந்திரம் - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி(5.11.2018) அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம்
 | 

தீபாவளி ஸ்பெஷல் - தினம் ஒரு மந்திரம் - ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க

ஸ்ரீ தன்வந்திரி ஜெயந்தி(5.11.2018) அன்று சொல்ல வேண்டிய ஸ்லோகம் 

தீபாவளி அமாவாசைக்கு இரண்டு நாட்கள் முன்பாக வரும் திரயோதசி அன்று தான் தன்வந்திரி ஜெயந்தி, ‘தன்திரயோதசி’ என்ற பெயரில்  கொண்டாடப்படுகிறது. நோய்கள் வராமலிருக்கவும், நல்ல உடல் ஆரோக்கியமும் நீண்ட ஆயுள் கிடைக்கவும் தன்வந்திரி வழிபாடு அவசியம். தன்வந்திரி பகவான் படத்தை வீட்டில் வைத்து தினமும் இந்த சுலோகத்தை16 முறைக்குக் குறையாமல் கூறினால் நல்ல  பலன்கள் கிட்டும்

"ஓம் நமோ பகவதே மஹாசுதர்ஸன வாசுதேவாய தன்வந்த்ரயே

அம்ருதகலச ஹஸ்தாய சர்வ பய விநாசாய சர்வ ரோக நிவாரணாய

த்ரைலோக்ய பதயே த்ரைலோக்ய நிதயே ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூப

ஸ்ரீ தன்வந்த்ரி ஸ்வரூப ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஔஷத சக்ர நாராயணாய நமஸ்தே.'

பொருள்: ஸ்ரீ மஹாசுதர்சனராகவும், வாசுதேவராகவும் விளங்குபவரும்; அமிர்த கலசத்தைக் கரங்களில் ஏந்தி, அனைத்து பயங்களைப் போக்குபவரும்; எல்லா நோய்களுக்கும் நிவாரணம் அளிப்பவரும்; மூன்று உலகங்களுக்குத் தலைவராக விளங்குபவரும்; அனைத்துச் செல்வங்களுக்கும் அதிபதியாக விளங்கு பவருமான ஸ்ரீ மகாவிஷ்ணு ஸ்வரூபியான ஸ்ரீ ஔஷத (மருந்து) சக்ர நாராயணரான ஸ்ரீ தன்வந்திரிப் பெருமானை வணங்குகிறேன்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP