தீபாவளி ரெசீப்பி - தித்திக்கும் அதிரசம்!

அதிரசம் இல்லாத தீபாவளியா எனும் அளவுக்கு, தீபாவளியையும், அதிரசத்தையும் பிரிக்கவே முடியாது. அதிரச மாவை இரண்டு நாட்களுக்கு முன்பு தயார் செய்து வைத்து விட்டு, பிறகு அதிரசம் செய்தால் அதன் சுவை சுண்டி இழுக்கும்.
 | 

தீபாவளி ரெசீப்பி - தித்திக்கும் அதிரசம்!

அதிரசம் இல்லாத தீபாவளியா எனும் அளவுக்கு, தீபாவளியையும், அதிரசத்தையும் பிரிக்கவே முடியாது. எல்லோருக்கும் பிடித்தமான இதனை எப்படி செய்வது என பார்ப்போம்... 

தேவையானப் பொருட்கள்: அரிசி – அரை கிலோ, வெல்லம் – 300 கிராம், ஏலக்காய் சிறிதளவு, நெய் – 1 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு.

செய்முறை: பச்சரிசியை 4 மணி நேரம் ஊற வைத்து நீரை வடித்து மிக்ஸியில் அரைத்து, மாவினை நைசாக சலித்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கி அடிகனமான பாத்திரத்தில் போட்டு வெல்லம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பிசுபிசுப்பு பதம் வந்தவுடன் அதில் ஏலக்காயை பொடித்து போடவும். பின்னர் அரிசி மாவை சிறிது சிறிதாக தூவி கட்டிகள் இல்லாமல் கிளறவும். மாவு நன்கு வெந்து குமிழ் குமிழாக வரும் போது நெய் ஊற்றி இறக்கவும். பிறகு அதை அதிசரங்களாகத் தட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

மாவை இரண்டு நாட்களுக்கு முன்பு தயார் செய்து வைத்து விட்டு, பிறகு அதிரசம் செய்தால் அதன் சுவை சுண்டி இழுக்கும்.  

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP