Logo

நல்ல கணவன், நிறைந்த செல்வம், சுகப்பிரசவத்தை அருளும் ஆடிப்பூர வழிபாடு…

இந்நந்நாளில் ஒற்றைப்படை எண் ணிக்கை வருமாறு ஏழை சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து புடவை, (இயலாதவர்கள் ரவிக்கை) மஞ்சள், குங் குமம்,வெற்றிலைப் பாக்கு,பழம், பணம் வைத்து தாம்புலம் கொடுத்தால் வாழ்வில் மகிழ்ச்சி...
 | 

நல்ல கணவன், நிறைந்த செல்வம், சுகப்பிரசவத்தை அருளும் ஆடிப்பூர வழிபாடு…

அம்மனை வழிபட சிறந்த மாதம் ஆடிமாதம். ஆடிமாதத்தில் தான் இறைவனை வழிபட சிறப்புக்குரிய விரத தினங்களும், முக்கிய வழிபாடுகளும் நடைபெறுகிறது.ஆடிசெவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடி அமாவாசை, வரலட்சுமி நோன்பு இதையெல்லாம் தாண்டி ஆடிப்பூரம் என்னும் நாளும் அம்மனுக்கு மிகவும் உகந்த நாள்.

ஆடிமாதம் வரும் பூர நட்சத்திர நாளில்தான் உமாதேவி அவதரித்ததாக கூறுகிறது புராணம்.இது அம்பிக்கைகுரிய நாளாக  விளங்குகிறது. சித்தர்களும், ஞானிகளும், ரிஷிகளும் கூட இந்நாளில் தான் தவத்தை தொடங்கினார்கள் என்கிறது புராணக் கதைகள்.

ஆடிப்பூரத்தில் அம்மனை வணங்கினால் கன்னிப்பெண்கள் மனம் நிறைந்த மணாளனை வணங்கும் பேறை பெறுவார்கள். திருமணமாகி குழந்தைப்பேறு வேண்டும் பெண்கள் தாய்மை அடைவார்கள். இன்றைய தினம் அம்மன் கோயில்களில் பிர சாதமாக கொடுக்கும் வளையலை வாங்கி அணிந்தால் இத்தகைய பேறு நிச்சயம் பெறலாம்.

பட்டாடைகளாலும், ஆபரணங்களாலும், மலர்களாலும், கனிகளாலும், மஞ்சள் குங்குமத்தாலும் அலங்கரிக்கப்படும் அழகு அம்மன் ஆடிப்பூரத்தில் மட்டும் கண்ணாடி வளையல்களால் அலங்கரிக்கப்படுகிறாள். அம்மன் நித்ய கன்னி என்பதால் அம் மனுக்கு பிள்ளைப்பேறு வளைகாப்பு கிடையாது. அதனால் ஆடிப்பூரமான இன்று அம்மனுக்கு வளையல்அணிவித்து வளை காப்பு தினமாக கொண்டாடி மகிழ்கிறார்கள் பக்தர்கள்.  

உலகத்தில் இருக்கும் அனைத்து ஜீவ ராசிகளையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் அன்னைக்கு தூய்மையான பக்தி யுடன் மஞ்சள் காப்பு, குங்கும காப்பு போல் இந்த வளையல் வளைகாப்பும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரமான இன்று அனைத்து சக்தி ஸ்தலங்களிலும், வைணவத்தலங்களிலுமுள்ள அம்பாளுக்கு முழுக்க முழுக்க கண்ணாடி வளை யல்களால் அலங்கரித்திருப்பார்கள். கொள்ளை அழகுடன் காட்சி அளிக்கும் அம்மனைக் காண இருகண்கள் போதாது.

அம்மனுக்கு சாற்றப்பட்ட வளையல்களை வாங்கி அணியும் பெண்கள் திருமணபாக்கியமும், திருமணமாகியவர்கள் குழந் தைப்பேறுபாக்கியமும் பெறுவார்கள். இன்று பெண்கள் அதிகாலை எழுந்து வீட்டையும் பூஜை அறையையும் சுத்தம் செய்து அம்பாளை வழிபட்டு சர்க்கரை பொங்கல்நைவேத்யம் செய்ய வேண்டும். இந்நந்நாளில் ஒற்றைப்படை எண்ணிக்கை வரு மாறு ஏழை சுமங்கலிப் பெண்களை வீட்டுக்கு அழைத்து புடவை, (இயலாதவர்கள் ரவிக்கை) மஞ்சள்,குங்குமம்,வெற்றி லைப்பாக்கு,பழம், பணம் வைத்து தாம்புலம் கொடுத்தால் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கும்.அம்மன் மனமகிழ்ந்து வேண்டும் வரம் கொடுப்பாள் என்பது ஐதிகம்.

மாலையில் விளக்கேற்றி அருகில் உள்ள சக்தி ஸ்தலங்களுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு அம்பி கையை வழிபடவும். அம்பிகைக்கு அலங்கரித்த வளையல்களைப் பிரசாதமாக பெற்று கைகளில் அணிந்துகொண்டால் கர்ப் பிணிகளுக்கு சுகப்பிரசவம் நடக்கும். குழந்தைப்பேறு வேண்டும் பெண்களுக்கு அம்பிகையின் அருளால் தாய்மை பேறு கிட் டும். மணமாகாத பெண்கள் நல்ல கணவனை பெறுவார்கள்.

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP