ஆடிப்பூரம் - அம்பாள் அவதரித்த தினம் இன்று

எம்பெருமானில் யாரை மணம் புரிய நினைக்கிறாய் என்று கேட்டார். அனைவர் பற்றியும் கூற சொல்லி கேட்டகுழற்கோதை அழகிய மணவாளனின் கண்ணழகு, குழலழகு போன்றவற்றால் கவரப்பட்ட திருவரங் கனையே மணம் முடிக்க வேண்டும் என்று அன்பு தந்தையிடம் வேண்டுகோள் வைத்தாள்...
 | 

ஆடிப்பூரம் - அம்பாள் அவதரித்த தினம் இன்று

அம்மனுக்கு உகந்த மாத ஆடிமாதத்தில் வரும் பூர நட்சத்திரமே உமாதேவியார் அவதரித்த நாளாகும்.இத்திருநாளில் தேவி ஸ்ரீ ஆண்டாளாக திருவில்லிப்புத்தூரில் துளசி வனத்தில் அவதரித்தாள். குழந்தையான தேவியை பெரியாழ்வார் கண்டெ டுத்து சுரும்பார் குழற்கோதை என்ற பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்துவந்தார்.

நந்தவனத்தில் இருக்கும் நறுமணமிக்க மலர்களை பறித்து தூய்மை குறையாமல் அதை மாலையாக்கி ரெங்க மன்னரின் கழுத்தை அலங்கரிப்பது இவரது தலையாய பணியாக இருந்தது. அவ்வாறு கோர்க்கப்படும் மாலையை வளர்ந்து வரும் சுரும்பார் குழற்கோதை ரெங்கமன்னரின் மீது கொண்ட ஆவலால் யாரும் அறியாமல் அந்த மாலையை தமது கழுத்தில் அணிந்து அழகுபார்த்து  அதன் பிறகே பெருமாளுக்கு அனுப்பி வைத்தாள்.

வழக்கம்போல் இவ்வாறு குழற்கோதை எம்பெருமானுக்கான மாலையை அணிவதும், அதன்பிறகு பெருமாளுக்கு அனுப்பி வைப்பதுமாய் இருந்தாள். ஒரு முறை அப்படி அனுப்பப்பட்ட மாலையில் நீண்ட கூந்தல் முடி ஒன்று இருப்பதைக் கண்டு அந்த மாலையை ஆழ்வாரிடம் திருப்பி அனுப்பி விட் டார்கள். எப்படி இத்தகைய பிழை நேர்ந்தது. நந்தவனத்தில் இருந்து மலர்களைப் பறித்து தரையில் படாமல் அல்லவா மாலை தொடுத்தோம் என்று வருந்தியபடி வீட்டிற்கு திரும்பினார்.

மறுநாள் மாலை கோர்த்து முடித்து அதை எடுத்துக்கொண்ட தயாரன போது தம்முடைய மகள் குழற்கோதை அந்த மாலையைக் கழுத்தில் அணிவிப்பதைக் கண்டு அதிர்ந்தார். எம்பெருமானுக்கு சூட்ட வேண்டிய மாலையை எடுத்து அணி யலாமா என்று கடிந்துகொண்டார். ஆனால் அன்று இரவு அவர் கனவில் தோன்றிய எம்பெருமான் ஆண்டாள் சூடிய மாலையையே தனக்கு அணிவிக்கும்படி கேட்டுகொண்டார். ஆழ்வாரும் மகிழ்ந்து அவ்வாறே செய்யலானார்.

மணப்பருவம் எய்திய குழற்கோதையிடம் மணவாளன் பற்றி பேச்செடுத்தார் ஆழ்வார். மானிடர்களை விரும்பாமல் எம் பெருமானை மணமுடிக்க குழற்கோதை உறுதியாக கூறியதும் செய்வதறியாது திகைத்தார். அப்படியெனில்  108 திருப்பதிக ளில் வாழும் எம்பெருமானில் யாரை மணம் புரிய நினைக்கிறாய் என்று கேட்டார். அனைவர் பற்றியும் கூற சொல்லி கேட்டகுழற்கோதை அழகிய மணவாளனின் கண்ணழகு, குழலழகு போன்றவற்றால் கவரப்பட்ட திருவரங்கனையே மணம் முடிக்க வேண்டும் என்று அன்பு தந்தையிடம் வேண்டுகோள் வைத்தாள்.

எப்படி நடக்கும் இந்தமணம் என்று கவலைக்கொண்ட ஆழ்வாரின் கனவில்தோன்றிய எம்பெருமான் கோதையை திருவரங் கத்துக்கு அழைத்து வாருங்கள். தகுந்த நேரத்தில் அவள் கைத்தலம் பற்றுகிறேன் என்றார். சொன்னபடி திருவரங்கத்து கோயில் பரிவாரங்கள் வரிசையாகவில்லிப்பூத்தூர் வந்து ஆழ்வார்களிடம் எம்பெருமான் கோதையை அழைத்துவர ஆணை யிட்டதாக சொல்ல. பட்டாடைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கோதை பல்லக்கில் ஏறி திருவரங்கம் சென்றாள்.

அங்கு சூழ இருந்தவர்களும், பாண்டிய மன்னன் வல்லபதேவன் படைகள் சூழ பல்லக்கிலிருந்து இறங்கிய சூடி கொடுத்த சுடர்க்கொடியாள் ஆண்டாள் பட்டாடைகளோடு இறங்கி அரங்கனை நோக்கி சென்றாள். அவனை வணங்கி கருவறைக்குள் காலடி எடுத்தவளை அரங்கன் பற்றிக்கொண்டான். அங்கிருந்த அனைவரும் வியக்கும்வகையில் மறைந்து போனாள் ஆண் டாள் என்னும் குழற்கோதை.

கோதை பிறந்த ஊர். கோவிந்த வாழும் ஊர் என்று சொல்லும் ஆண்டாள் அவதரித்த ஸ்ரீ வில்லிப்புத்தூரில் திருவாடிப்பூரம் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று தேரோட்டம் நடைபெறுவது மிகவும் விசேஷம். ஸ்ரீ வில்லிப் புத்தூரில் ஆண்டாள் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஆடிப்பூரத்தன்று ஆண்டாளைத் தரிசித்தால் ஆனந்த வாழ்வு கிட்டும் என்பது ஐதிகம்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP