பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் விசில் நாயகி மற்றும்  காலா மருமகள்

பிக் பாஸ் 3ல் கலந்து கொள்ளும் மற்றும் இருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விசில் பட நாயகி செரின் மற்றும் காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்த சாக்சி அகர்வால் உள்ளிட்ட இரு நடிகைகள் பிக் பாஸ் 3ல் பங்கேற்கின்றனர்.
 | 

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் விசில் நாயகி மற்றும்  காலா மருமகள்

பிரபல நடிகரும் , அரசியல் பிரமுகருமான கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 3 வது சீசன் நாளை ( 23 ஜூன்) முதல் ஆரம்பமாகிறது. இதற்கான பணிகள் சென்னை அருகே அமைக்கப்பட்டுள்ள பிக் பாஸ் செட்டில் மும்மறமாக நடந்து வருகிறது. ஏற்கனவே இதில் பங்கேற்கும் பிரபலங்கள் குறித்த தகவல்களை பதிவிட்டிருந்தோம். இதனிடையே பிக் பாஸ் 3ல் கலந்து கொள்ளும் மற்றும் இருவர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் விசில் நாயகி மற்றும்  காலா மருமகள்

நடிகை செரின் இவர் ”துள்ளுவதோ இளமை” படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் . இதைத்தொடர்ந்து  ஜெயா, விசில், நண்பேன்டா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீப காலமாக பட வாய்ப்புகள்  எதுவும் இல்லாமல் இருந்த இவர், தற்போது பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்க உள்ளார்.

பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்கும் விசில் நாயகி மற்றும்  காலா மருமகள்

அதேபோல காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்திருந்த ”சாக்சி அகர்வாலும்’ இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என தெரிய வந்துள்ளது.  மாடல் அழகியான இவர் சமீபத்தில் அரைகுறை ஆடையுடனான தனது புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டு சர்ச்சைக்கு உள்ளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP