வாட்ஸ் ஃபார் டுடேஸ் லஞ்ச்? - பிக்பாஸ் ப்ரோமோ!

வாட்ஸ் ஃபார் டுடேஸ் லஞ்ச்? - பிக்பாஸ் ப்ரோமோ!
 | 

இப்போது வரை பிக் பாஸின் இரண்டு ப்ரோமோக்கள் வெளியிடப் பட்டிருக்கின்றன. அதில் பெண்கள் அனைவரும் உச்சகட்ட கோபத்தில் இருப்பது போல் தெரிகிறது. வைஷ்ணவி, யாஷிகா அனந்த், ரம்யா ஆகியோர் கோபத்துடன் இருக்கிறார்கள். 'வாயை திறந்து அசிங்கமாக பேசிட்டாங்க' என ரம்யா புலம்புகிறார். அந்த நேரத்தில் பொன்னம்பலத்தைக் காட்டுகிறார்கள். நான் இதைப் பற்றி அவரிடம் பேசப் போகிறேன் என சொல்லி விட்டு ஆண்கள் அறையை நோக்கி மும்தாஜ் செல்வது போல் முதல் ப்ரோமோ, ட்விஸ்டுடன் இருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பதை நிகழ்ச்சியில் பார்த்தால் தான் தெரியும். 

அடுத்ததில் சென்ட்ராயனுக்கு ஆங்கிலம் கற்றுத் தருகிறார் வைஷ்ணவி. 'நான் கமல் சார் கிட்ட இங்கிலீஷ்ல பேசணும்' என்ற முனைப்போடு இருக்கிறார் சென்ட்ராயன். அதே வேகத்தில் சென்று, சமையல் செய்துக் கொண்டிருக்கும் மமதியிடம் 'வாட்ஸ் ஃபார் டுடேஸ் லஞ்ச்?' எனக் கேட்கிறார். வைஷ்ணவி உள்ளிட்டோர் பெண்கள் அறையில் இருந்து இதனைப் பார்த்தபடி கை தட்டுகின்றனர்.  

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP