என்ன சொல்ல போகிறார்  கமல் பிக்பாஸ்3!

நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில் பேச உள்ள கமல் எப்போதும் போல அரசியல் குறித்து மட்டும் பேசுவாரா? அல்லது இந்த சீசனிலாவது ட்ரெண்டை மாத்துவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம்.
 | 

என்ன சொல்ல போகிறார்  கமல் பிக்பாஸ்3!

பிக் பாஸ் துவங்கிய இரண்டு நாட்கள் மிகுந்த குதுகலமா இருந்த பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா மிதுன் 16 வது போட்டியாளராக களம் இறக்கப்பட குதூகலம் ரணகளமாக மாறி, இதுவரை ஒவ்வொரு நாளும் புது புது விஷயங்களுக்காக சண்டை நடந்த வண்ணம் உள்ளது.

இதற்கிடையில் ’பங்கேற்பாளர்கள் பற்றிய சொந்த விவகாரங்கள் குறித்து மற்றவர்களிடம் வெளிப்படையாக கூற வேண்டும்’ என்பதை இந்த வார டாஸ்காக பிக் பாஸ் கொடுத்திருந்தார்.

அதன் படி பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்களது சொந்த கதை, சோகக்கதைகளைக் கூறி அனைவரையும் மனமுருக வைத்தனர். இந்நிலையில் பங்கேற்பாளர்களை தொகுப்பாளர் கமல், வாரம் ஒரு முறை சந்திப்பது வழக்கம்.

அதன்படி கமல் வரவிருக்கும்  எபிசோடுக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. நிகழ்ச்சி துவங்கிய முதல் வாரத்தில் பேச உள்ள கமல் எப்போதும் போல அரசியல் குறித்து மட்டும் பேசுவாரா? அல்லது இந்த சீசனிலாவது ட்ரெண்டை  மாத்துவாரா? என்பதை பொருத்திருந்து பார்ப்போம். 

 

 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP