நீ என்ன பெரிய இதுவா? பிக் பாஸ் ப்ரோமோ 2

பிக்பாஸில், இன்றைய இரண்டாவது ப்ரோமோவில் டேனி - வைஷ்ணவிக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக வெடிக்க தொடங்குகிறது.
 | 

நீ என்ன பெரிய இதுவா? பிக் பாஸ் ப்ரோமோ 2

பிக்பாஸில், இன்றைய முதலாவது ப்ரோமோவில் டேனி - வைஷ்ணவிக்கு இடையிலான பிரச்னை பூதாகரமாக வெடித்தது. இரண்டாவது பிரமோவில் அது மேலும் அதிகரித்துள்ளது. 

நேற்றைய 56-வது பிக் பாஸ் தினத்தில், வீட்டில் மூத்தவரான பொன்னம்பலம் வெளியேற்றப்பட்டார். அதனை அடுத்து இன்றைய ப்ரோமோ 1ல், எவிக்‌ஷனுக்கான நாமினேஷன்கள் நடைபெறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. வைஷ்ணவி, டேனி பேசுவது தனக்கு ஹர்ட் ஆவதாக கூறி நாமினேட் செய்தார். தொடர்ந்து டேனி, நான் தமிழில் சுத்தமாக பேசுவது வைஷ்ணவிக்கு வருத்தமளிப்பதாகவும், தமிழில் பேசுபவர்களை பாராட்டுங்கள் என வைஷ்ணவியை நாமினேட் செய்திருந்தார். 

இந்த நிலையில், பிக் பாஸ் ப்ரோமோ 2 வெளியாகியுள்ளது. அதில் டேனி, "வைஷ்ணவி இங்கே வாருங்கள் உங்களை எதிர்த்து நான் போராட தயாராக உள்ளேன்" என்று சொல்வது போன்று, ப்ரோமோ ஸ்டார்ட் ஆகிறது. இதை தொடர்ந்து வைஷ்ணவி, "இந்த வீட்டில் அனைவரும் சரிசமமாக இருக்கிறோம். ஆனால் டெஸ்ட் வைக்க டேனி யார்" என்று கேட்கிறார்.

டேனி - நீ யாரு என்னை அவமானப்படுத்த; வைஷ்ணவி - நீ யாரு சொல்றதுக்கு நா திருந்துவதற்கு என்று இருவரும் புறம் பேசி வருகின்றன.

இருவரும் ஒருவரைக்கொருவர் குற்றம் சுமத்தி பேசும் காட்சிகள் மாறி மாறி காட்டப்படுகின்றன. கடைசியில் வைஷ்ணவி, "நீ என்ன பெரிய இதுவா..?" என்று டேனியை பேசும் காட்சியை பார்க்கையில், இந்த வாரம் மிகவும் காரசாரமாக பிக் பாஸ் 2 நகர இருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP