குடும்பக் கதையில் நடிக்கும் விஜய் வில்லன்...?

விஜயுடன் துப்பாக்கிப் படத்தில், "ஸ்லீப்பர் செல்களின் தலைவனாக" நடித்து மிரட்டியவர் வித்யூத் ஜம்வால். பிறகு சூர்யாவுடன் 'அஞ்சான்' படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு தமிழில் நடிக்காதவர், தற்போது 'ஜங்லீ' எனும் இந்திப் படத்தில் நடித்து வருகிறார்.
 | 

அடுத்ததாக இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கர் இயக்கும் ஒரு குடும்பக் கதையில் நடிக்கிறாராம் இந்த ஆக்‌ஷன் ஸ்டார். வெளிநாட்டிலிருந்து மும்பைக்கு வரும் என்.ஆர்.ஐ-யாக நடிக்கும் வித்யூத், அங்கு தான் சந்திக்கும் அசாதாரண சூழ்நிலையை எப்படி கையாள்கிறார் என்பது தான் படத்தில் இவரின் கதாப்பாத்திரமாம். 

இப்போதைய நிலவரத்தின்படி, படத்திற்கு கதாநாயகி தேர்வு முடிந்துவிட்டதாம், அவரை கூடிய சீக்கிரம் அதிகாரப் பூர்வமாக ஆறிவிக்க இருக்கிறார்களாம் படக்குழுவினர். தவிர, இந்தப் படத்தின் மூலம் 8 வருடத்திற்குப் பிறகு மராத்தியிலிருந்து மீண்டும் பாலிவுட் திரும்புகிறார்  இயக்குநர் மகேஷ் மஞ்ரேக்கர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP