திருட்டு விசிடிக்கு எதிராக கொந்தளிக்கும் வித்யாபாலன்

கோலிவுட்டைப் போலவே பாலிவுட்டிலும் பெருகி வரும் திருட்டு விசிடிக்கு எதிராக நடிகை வித்யாபாலன் குரல் கொடுத்து வருகிறார்.
 | 

திருட்டு விசிடி என்பது இப்போது தேசிய பிரச்னையாக மாறி வருகிறது. கோலிவுட்டில் திருட்டு விசிடி பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், அதனை அடியோடு ஒழிப்பதற்காக தமிழ் திரையுலகில் பெரும் முயற்சி எடுத்து வரும் நிலையில், கோலிவுட்டைப் போலவே பாலிவுட்டிலும் திருட்டு விசிடி பிரச்னை முளைத்துள்ளது. இதற்கு எதிராக நடிகை வித்யாபாலன் குரல் கொடுத்திருக்கிறார். 

"திருட்டு விசிடி என்பது கோலிவுட்டில் மட்டுமல்ல, இப்போது பாலிவுட் பக்கமும் முளைத்திருக்கிறது.இந்த விஷயத்தில் வடக்கு, தெற்கு என்கிற பாகுபாடு பாராமல் திருட்டு விசிடியை ஒழிப்பதற்கு ஒன்று சேருவோம்! திரைத்துறையின் முக்கியமான பிரச்னையில் பங்கு பெறுவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எல்லோரும்  ஒன்றிணைந்து போராடி திருட்டு விசிடிக்கு முற்றுப் புள்ளி வைக்கவேண்டும். சட்டவிரோதமாக பதிவிறக்கம் செய்து நம்மை கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டாமா? வாருங்கள் ஒன்று சேருவோம்” என அழைப்பு விடுத்திருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP