'பாகுபலி 2'-ஐ மிஞ்சிய வசூல்ராஜா 'சஞ்சு' தொடரும் வேட்டை!

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'சஞ்சு' முதல் வார இறுதியில் ரூ.120 கோடி வசூலை எட்டியிருக்கிறது.
 | 

'பாகுபலி 2'-ஐ மிஞ்சிய வசூல்ராஜா 'சஞ்சு' தொடரும் வேட்டை!

ராஜ்குமார் ஹிராணி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்த 'சஞ்சு' முதல் வார இறுதியில் ரூ.120 கோடி வசூலை எட்டியிருக்கிறது. பாகுபலி 2-வின் வசூல் சாதனை ஒன்றை முறியடித்துள்ள இந்தப் படம் திங்கள்கிழமை ரூ.25 கோடியுடன் இதுவரை ரூ.145 கோடி வசூலை எட்டியிருக்கிறது.

பல சர்ச்சைகளில் சிக்கி பலமுறை சிறைக்குச் சென்று வந்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் பற்றிய படம்தான் சென்ற வாரம் வெளியான 'சஞ்சு'. 

இந்தப் படத்தில் சஞ்சய் தத் கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருப்பவர் நடிகர் ரன்பீர் கபூர். படத்தின் டீஸர் வெளிவந்தவுடனேயே பல பாராட்டுகளையும் எதிர்பார்ப்புகளையும் குவித்தது 'சஞ்சு'. சஞ்சய் தத்தின் பல பாவனைகளை அப்படியே நடித்துக் காட்டி இருக்கும் ரன்பீருக்கும் படம் வெளிவருவதற்கு முன்பே பல பாராட்டுக்கள் குவிந்தன. 

ரசிகர்கள் எதிர்பார்ப்பை வீணடிக்காமல் படத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்ல பாடுபட்டிருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் ஹிராணி. 

இந்த வருடத்தின் முதல் வார இறுதி வசூலில் ரூ.120.06 கோடியை எட்டி முதலிடம் பிடித்தது 'சஞ்சு'. ரூ.150 கோடி இலக்கை விரைவில் எட்டி விடும் நிலையில் வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது இந்தப் படம்.

முதல் நாள் வசூல் வேட்டை ரேஸில் சஞ்சு, சல்மான் கான் நடித்த 'ரேஸ்-3' படத்தை முந்தியது. இதுநாள் வரை 'பாகுபலி 2' படம் தான் அதிக ஒருநாள் வசூலில் முதலிடம் வகித்து வந்தது. அந்தப் படத்தின் இந்தி வெர்ஷன் மூன்றாவது நாளில் ரூ.46.50 கோடி வசூலித்தது. அதையும் முறியடித்த 'சஞ்சு' தனது மூன்றாவது நாளில் ரூ.46.71 கோடி வசூலித்தது. 

இந்த வருடத்தின் ரூ.100 கோடி வசூல் படங்களின் பட்டியலிலும் சேர்ந்துள்ளது இப்படம் தொடர்ந்து வசூல் வேட்டை நிகழ்த்தி வருகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP