சங்கத் தமிழன் நாளை வெளியாவதில் சிக்கல்?

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத் தமிழன் நாளை வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 | 

சங்கத் தமிழன் நாளை வெளியாவதில் சிக்கல்?

நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சங்கத் தமிழன் நாளை வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சங்கத் தமிழன். இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிகொண்டே வந்தது. இறுதியாக படம் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்நிலையில், நிலுவைத் தொகையை பட தாயரிப்பு நிறுவனம் இதுவரை தராததால் திரைப்படத்தை வெளியிட விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படம் வெளியாகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று மாலை நடைபெறும் கூட்டத்தில் சுமூக தீர்வு எட்டினால் நாளை படம் வெளியாகும் என தெரிகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP