வைரலாகும் விஷாலின்‘இரும்புத்திரை’டீசர்

விஷால் நடித்திருக்கும் ‘இரும்புத்திரை’படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.
 | 

வைரலாகும் விஷாலின்‘இரும்புத்திரை’டீசர்


விஷால் நடித்திருக்கும்‘இரும்புத்திரை’படத்தின் டீசர் சமூக வலைத்தளங்களில் செம லைக்ஸ் குவித்து வைரலாகி வருகிறது.       

விஷால், சமந்தா நடித்திருக்கும் படம் 'இரும்புத்திரை'. விஷால் ஃபிலிம் பேக்ட்ரி நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் பி.எஸ்.மிஸ்ரன் இயக்கியிருக்கிறார். யுவன்ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார். சமூக ஊடங்களில் நடக்கும் சைபர் கிரைம் பற்றிய இந்தப் படம் சைக்கோ த்ரில்லர் படமாகும். இப்படத்தில் விஷால் மேஜர் கதிரவன் என்கிற ராணுவ அதிகாரியாக வருகிறார். சமந்தா, டாக்டர் ரதிதேவி என்கிற மனநல மருத்துவராக நடித்துள்ளார். இதில், அர்ஜுன் வில்லனாக நடித்துள்ளர். மேலும் டெல்லி கணேஷ், ரோபோ சங்கர் முக்கிய கதாப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


‘இரும்புத்திரை' படம் வரும் ஜனவரி 26-ஆம் தேதி ரிலீசாகிறது. இப்படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் ஜனவரி 6ந்தேதி மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவுடன் மிகப் பிரமாண்டமாக நடக்க உள்ளது.  

முன்னதாக நேற்று முன்தினம் இப்படத்தின் டீசர்  வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் விஷால், சமந்தா, இயக்குநர் மித்ரன், நடிகர்கள் மன்சூரலிகான், ரோபோ சங்கர், 

இந்நிலையில்,‘இரும்புத்திரை’படத்தின் டீசர் ரசிகர்களால் செம லைக்ஸ் குவித்து, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP