கனா படத்தின் டீசர் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகிவுள்ளது.
 | 

கனா படத்தின்  டீசர் வெளியானது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் கனா. திபு நிணன் தாமஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நடுத்தர வீட்டுப் பெண் ஒருவர்,  தேசிய கிரிக்கெட் அணியில் இடம்பிடிப்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. கிரிக்கெட்டை மையப்படுத்தி பல படங்கள்  வந்தாலும் பெண் கிரிக்கெட்டை மையப்படுத்தி உருவாகி இருக்கும் முதல் படம் இது.

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகிவுள்ளது.

கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பெண்ணின் கிரிக்கெட் கனவு, மகளின் கனவை நிறைவேற்றத் துடிக்கும் தந்தை, இதுதான் திரைப்படத்தின் மையக் கதை. படத்தின் டீசரில் உள்ள காட்சிகள் உணர்வுபூர்வமாகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது.

இந்த படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில்  நடித்திருக்கிறார். அவருக்கு அப்பாவாக சத்யராஜ் நடித்திருக்கிறார். மேலும் இளவரசு, ரமா, அந்தோனி பாக்யராஜ், சவரிமுத்து, ஹலோ கந்தசாமி, முனீஷ்காந்த், நமோ நாராயணன், பாலாஜி வேணுகோபால், பிளேட் சங்கர், அசோக் குமார், குணா, சத்யா. என்.ஜே உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.இந்த படத்தில் வாயாடி பெத்த புள்ள என்ற பாடலை சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவரது மகள் ஆராதனா பாடியுள்ளார்.

newstm.in

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP