சூப்பர் சிங்கர் செந்தில் நடிக்கும் கரிமுகன் ட்ரைலர்!

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களைக் கவர்ந்த செந்தில் கணேஷ் கரிமுகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. காயத்ரி என்ற கேரளா பெண் செந்திலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
 | 

சூப்பர் சிங்கர் செந்தில் நடிக்கும் கரிமுகன் ட்ரைலர்!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக் கொண்டவர்கள் செந்தில் கணேஷ் - ராஜ லட்சுமி தம்பதியினர். இதில், இந்நிகழ்ச்சியின் இறுதிவரை தாக்குப் பிடித்து டைட்டிலையும் ஜெயித்தார் செந்தில். இவர்கள் பாடிய 'சின்ன மச்சான்' என்ற பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகி வரும் சார்லி சாப்ளின் - 2 படத்திலும் இந்தப் படல் இடம் பெற்றுள்ளது. இதை செந்தில் கணேஷ் - ராஜ லட்சுமி ஜோடியே பாடியிருக்கிறார்கள். 

இந்த பாடலை எழுதியவர் செல்ல தங்கையா. இவர் தற்போது கரிமுகன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் செந்தில் கணேஷே ஹீரோவாக நடிக்க, காயத்ரி என்ற கேரளா பெண் கதாநாயகியாக நடிக்கிறார். 

ஏ.விமல் புரொடக்‌ஷன்ஸ் சார்பாக டி.சித்திரைச்செல்வி, எம்.செல்வமணி, செந்தூர் பிக்சர்ஸின் எஸ்.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து இந்தத் திரைப்படத்தைத் தயாரிக்கிறார்கள்.

 

தற்போது இந்தத் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் ரசிகர்களின் மனதை வென்ற செந்திலுக்கு, வெள்ளித்திரை கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP