இணையத்தை கலக்கும் சீமராஜா ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் மற்றும் சமந்தா நடிப்பில் பொன்ராம் இயக்கி உள்ள சீமராஜா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த ட்ரெய்லர் வெளியான ஒரே நாளில் யூடியூபில் 1.5 கோடி பார்வைகள் பெற்று கலக்கி வருகிறது.
 | 

இணையத்தை கலக்கும் சீமராஜா ட்ரெய்லர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள சீமராஜா படத்தின் ட்ரெய்லர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் ஆகிய  திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனோடு சீமராஜா படத்தில் கைக்கோர்த்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

படத்திற்கு இமான் இசையமைத்துள்ள நிலையில், சமீபத்தில் வெளியான 'வரேன் வரேன் சீமராஜா' பாடல் செம ஹிட் ஆனது. மேலும் இந்த படம் வரும்  செப்டம்பர் 13ம் தேதி திரைக்கு வரவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.  இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது வெளியான ஒரே நாளில் யூடியூபில் 1.5 கோடி பார்வைகள் பெற்றுயிருப்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP