போராட வேண்டாம் என்பது பைத்தியகாரத்தனம்: போட்டுத் தாக்கும் எஸ்.ஏ.சந்திர சேகரன்!  

'போராடாமல் எதுவும் கிடைக்காது,போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்' என எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியுள்ளார்.
 | 

போராட வேண்டாம் என்பது பைத்தியகாரத்தனம்: போட்டுத் தாக்கும் எஸ்.ஏ.சந்திர சேகரன்!  

'போராடாமல் எதுவும் கிடைக்காது, போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம்' என எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசியுள்ளார்.

சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து 'டிராஃபிக் ராமசாமி' என்கிற பெயரிலேயே தயராகியிருக்கும் படத்தில்  நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரோகிணி நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு பாலமுரளி பாலு இசையமைத்திருக்கிறார். நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த ‘டிராஃபிக் ராமசாமி’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில், பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட, இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார்.

போராட வேண்டாம் என்பது பைத்தியகாரத்தனம்: போட்டுத் தாக்கும் எஸ்.ஏ.சந்திர சேகரன்!  

விழாவில் படத்தின் நாயகன் எஸ்.ஏ.சந்திரசேகரன்  பேசுகையில், "எனக்காக இந்த விழாவுக்கு வந்திருக்கும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கும், இயக்குநர்கள் ஷங்கர், ராஜேஷ், பொன்ராம் ஆகியோருக்கு நன்றி.  இந்த படத்தின் இயக்குநர் விக்கி என்னிடம் 6 ஆண்டுகள் அசிஸ்டெண்ட்டாக இருந்தார். அவர் எனக்காக பல கதைகளை சொன்னார், ஆனால், எதுவுமே எனக்குப் பிடிக்கவில்லை. ஒரு நாள் ’டிராஃபிக் ராமசாமி’யின் வாழ்க்கைக் கதையைப்  படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். இதில் நடிக்க  முடிவு செய்ததும் பல முறை டிராஃபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை கவனித்து, அதை எனக்குள் பொருத்திக் கொண்டேன்.  

இது, வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடிப் போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது ? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும்" என்றார்.

தூத்துக்குடிக்கு சென்று வந்த நடிகர் ரஜினிகாந்த், எதற்கெடுத்தாலும் போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்றார். அது முதல், ஆளாளுக்கு அவரைத் தாக்கி பேசி பரபரப்பாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP