சாமி ஸ்கொயர் டிரைலரை கலாய்கிறாரா தமிழ்பட இயக்குநர்?

இன்று வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலருக்கு 'தமிழ்படம்' இயக்குநர் அமுதன் நன்றி தெரிவித்து உள்ளார்.
 | 

சாமி ஸ்கொயர் டிரைலரை கலாய்கிறாரா தமிழ்பட இயக்குநர்?

இன்று வெளியான சாமி ஸ்கொயர் படத்தின் டிரைலருக்கு 'தமிழ்படம்' இயக்குநர் அமுதன் நன்றி தெரிவித்து உள்ளார். 
சாமி படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார் ஹரி. இதிலும் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், வில்லனாக பாபி சிம்ஹாவும் நடிக்கின்றனர். பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமீன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்க்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் டிரைலர் அறிவித்தப்படி இன்று வெளியானது.

சாமி ஸ்கொயர் டிரைலரை கலாய்கிறாரா தமிழ்பட இயக்குநர்?

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் 'தமிழ்படம்' இயக்குநர் அமுதன் பகிர்ந்துள்ளார். மேலும் அதில் 'நன்றி' என்று பதிவிட்டுள்ளார். தனது படத்தில் தமிழ் சினிமாவின் க்ளீசேக்களை கலாய்த்தவர் அமுதன். அவரது இயக்கத்தில் தமிழ்படம்-2வின் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பெரும்பாலும் தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் சிலவற்றை தான் இவர் தனது படத்தில் ஸ்பூஃப்பாக எடுக்கிறார். தங்களது ஆதர்ச நாயகன் பற்றி சிறு வார்த்தை தவறாக கூறினாலும் கொதிப்பவர்கள் கூட தமிழ் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இந்நிலையில் தற்போது அவர் சாமி படத்தின் டிரைலரை பகிர்ந்திருப்பதால் அதனையும் தனது படத்தில் கலாய்ப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக தமிழ்படம்-2 போலீஸ் அத்தியாயம் என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP