'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' சீன்கள் லீக்

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
 | 

'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' சீன்கள் லீக்

 

ரிலீசுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், விஜய் சேதுபதியின் 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்' படத்தின் சில காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். 

இன்னறைய தேதிக்கு விஜய் சேதுபதி தான் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ஹீரோ. 'ஒரு நல்ல  நாள்  பார்த்து சொல்றேன்',‘இடம் பொருள் ஏவல்’‘96’,‘சூப்பர் டீலக்ஸ்’,‘மாமனிதன்’,‘ஜுங்கா’,‘சீதகாதி’,மணிரத்தினம் படம் என படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதுதவிர, தெலுங்கு, தமிழில் தயாராகும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும் நடிக்கிறார் விஜய் சேதுபதி.

இதில், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படம் வரும் வெள்ளிக்கிழமை திரைக்கு வர இருக்கிறது. விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக், காயத்ரி, புதுமுகம் நிஹாரிகா, ரமேஷ் திலக், விஜி சந்திர சேகர் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கியிருக்கிறார். 


ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியானது. மேலும்,விஜய் சேதுபதி பேசும் சர்ச்சைக்குரிய வசனங்களுடன் வெளியான படத்தின் ட்ரெய்லர் பரபரப்பை ஏற்படுத்தியது. சிலரின் மனம் புண்படும்படி அந்த வசனங்கள் இருப்பதாகவும், படத்திலிருந்து வசனங்கள் தூக்கப்பட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில், 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் சில நிமிடக் காட்சிகள்  தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.


newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP