ஜூலை 28ல் தனுஷின் வடசென்னை டிரைலர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் டிரைலர் ஜூலை 28ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 | 

ஜூலை 28ல் தனுஷின் வடசென்னை டிரைலர்

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள வடசென்னை படத்தின் டிரைலர் ஜூலை 28ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. 

விசாரணை படத்திற்கு பிறகு வெற்றி மாறன் இயக்கிவரும் படம் வடசென்னை. இதில் தனுஷ் நாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராம், இயக்குனர் அமீர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஆன்ட்ரியா, சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ் மற்றும் பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். 

மூன்று பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்தின் முதற் பகுதி தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28ந் தேதி வெளியாகும் என நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 28ல் தனுஷின் வடசென்னை டிரைலர்

மூன்று வருடமாக உருவாகி வரும் வடசென்னை படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் ஐஸ்வர்யா காசிமேட்டில் வசிக்கும் பெண்ணாக நடித்திருப்பதாக ஏற்கனவே தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP