கல்யாண செலவுகள் எல்லாம் தர்மம்: சேரனின் திருமணம் டிரைலர்

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சேரன் இயக்கி இருக்கும் 'சேரனின் திருமணம்' திரைப்படத்தில் டிரைலர் நேற்று வெளியானது. திருமணம் இந்த காலத்தில் எப்படி நடக்கிறது, திருமணத்திற்கு முன்பான பிரச்னைகள் குறித்த காட்சிகள் இந்த டிரைலரில் இடம்பெற்றுள்ளன.
 | 

கல்யாண செலவுகள் எல்லாம் தர்மம்: சேரனின் திருமணம் டிரைலர்

நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சேரன் இயக்கி இருக்கும் 'சேரனின் திருமணம்' திரைப்படத்தில் டிரைலர் நேற்று வெளியானது.

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களுள் ஒருவர் சேரன். தேசிய விருதுகளை வாங்கி குவித்த இவர் தங்கர் பச்சானின் ‘சொல்ல மறந்த கதை’ திரைப்படத்தின் மூலம் நாயகனாகவும் அறிமுகமாகி பல திரைப்படங்களில் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், நீண்ட காலமாக திரைப்படங்கள் இயக்குவதை தவிர்த்து வந்த சேரன் தற்போது ‘திருமணம்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் தம்பி ராமய்யாவின் மகன் உமாபதி ஹீரோவாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக காவ்யா சுரேஷ் நாயகியாக அறிமுகமாகிறார். மேலும், சுகன்யா, எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், அனுபமா குமார், தம்பி ராமையா, மனோபாலா, ஜெயப்பிரகாஷ் ஆகியோருடன் சேரனும் இப்படத்தில் நடிக்கிறார்.

இதன் டிரைலர் நேற்று வெளியானது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP