டாப்ஸியின் வேதனை - எதுக்குத் தெரியுமா?

தமிழில் சில படங்களில் நடித்த டாப்ஸி சிறந்த வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார்.
 | 

டாப்ஸியின் வேதனை - எதுக்குத் தெரியுமா?

தமிழில் சில படங்களில் நடித்த டாப்ஸி சிறந்த வாய்ப்புகள் அமையாததால் பாலிவுட்டில் செட்டில் ஆகி விட்டார். 2015 - ல் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய வை ராஜா வை படத்திற்குப் பிறகு வேறெந்த தமிழ் படத்திலும் அவர் நடிக்கவில்லை. ஆனால் இந்தியில் முழு கவனம் செலுத்தி வருகிறார். 

தற்போது பிரகாஷ் ராஜ் இயக்கும் தட்கா, ஹாக்கி ப்ளேயர் சந்தீப் சிங்கின் வாழ்க்கை வரலாற்றுப் படமான சூர்மா, அனுராக் கஷ்யப் இயக்கும் மன்மர்ஸியான் மற்றும் முல்க் என நான்குப் படங்களில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் ஒரு தேசிய ஊடகத்திற்கு பேட்டியளித்த டாப்ஸி, 'சந்தீப் சிங்கின் விபத்து, அதன் பிறகு இந்திய ஹாக்கி டீமுக்கே கேப்டனாக மீண்டு வந்தது ஆகியவற்றைக் கேட்டவுடன், இது நமக்கு தெரியமல் போய் விட்டதே என்ற குற்றவுணர்வு எனக்கு மேலோங்கியது. இந்தப் படத்தில் நடித்தால் தான் அந்த குற்றவுணர்விலிருந்து வெளியே வர முடியும் எனத் தோன்றியது, அதனால் கதையைக் கேட்டு முடித்ததுமே ஓகே சொல்லிவிட்டேன். 

டாப்ஸியின் வேதனை - எதுக்குத் தெரியுமா?

கிராமம் மற்றும் நகரங்களில் ஹாக்கியும் பிரபலமான விளையாட்டாகத்தான் இருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் கிரிக்கெட்டைப் போல் மற்ற விளையாட்டுகள் கொண்டாடப் படுவதில்லை, இதற்கு தேசிய விளையாட்டான ஹாக்கியும் விதி விலக்கல்ல' என தனது ஆதங்கத்தைப் பகிர்ந்துக் கொண்டார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP