வசூல் சாதனைப்படைத்த ஶ்ரீதேவி மகளின் முதல் படம்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடித்திருக்கும் தடக் படம் வசூலில் சாதனைப் படைத்திருக்கிறது.
 | 

வசூல் சாதனைப்படைத்த ஶ்ரீதேவி மகளின் முதல் படம்

மறைந்த நடிகை ஶ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் முதல் படமான தடக் படம் வசூலில் சாதனைப் படைத்திருக்கிறது. 

சாஷன்க் இயக்கத்தில் ஜான்வி கபூர்-இஷான் நடிகர்களாக அறிமுகமாகி இருக்கும் படம் தடக். 2017ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'பத்ரிநாத் கி துல்ஹனியா' திரைபடத்திற்காக சிறந்த இயக்குநர் பிலிம் பார் விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிவுட் இயக்குநர் தான் ஷாஷன்க். தற்போது ஹிந்தியில் இவர் இயக்கிய 'தடக்' திரைப்படம் 'சைரட்' என்ற மராத்தி படத்தின் ரீமேக் ஆகும். இத்திரைப்படத்தினை கரண் ஜோஹர் தயாரித்துள்ளார். 

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நாயகியாக அறிமுகமாகும் இத்திரைப்படத்திற்கு பிரபலங்களின் பாராட்டை தாண்டி மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. திரையரங்குகளில் இப்படத்திற்கான புக்கிங் அதிக அளவில் நடைபெற்று கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் முதல் நாளில் மட்டும் ரூ. 8.71 கோடி ரூபாய் இந்தியாவில் படம் வசூல் செய்து  இருப்பது வியக்க வைத்துள்ளது.

"தடக் வெளியான முதல் நாளிலேயே 8.71 கோடி ரூபாய் பாக்ஸ் ஆஃபிஸில் வசூலித்திருப்பது ஆச்சிரியமான விஷயம் தான். புதுமுக நடிகர்களை கொண்ட திரைப்படம் இவ்வளவு வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறை. 'ஸ்டுடென்ட் ஆப் தி இயர்' திரைப்படத்தின் 8 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை இத்திரைப்படம் தோற்கடித்துவிட்டது" என்று வர்த்தக ஆய்வாளர் டரன் ஆதர்ஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த வார கடைசியில் படத்தின் வசூல் 20 கோடி ரூபாயை தாண்டி விடும் என்றும் கூறப்படுகிறது.

வசூல் ஒருபக்கம் சாதனைப்படைத்தாலும்.. கிளாசிக் சினிமாவான சைரட் படத்தை ரீமேக் செய்து கெடுத்துவைத்திருப்பதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP