பாலிவுடில் அறிமுகமாகும் ஸ்ரீ தேவியின் இளைய மகள்

ஜான்வியின் தங்கை குஷி கபூருக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம்.
 | 

பாலிவுடில் அறிமுகமாகும்  ஸ்ரீ தேவியின் இளைய மகள்

மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீ தேவியின் இளைய மகள் குஷி கபூர் பாலிவுட்டில் நடிக்க தயாராகியுள்ளார். ஸ்ரீதேவி உயிரோடு இருந்த போது அவரது மூத்த மகள் ஜான்வி கபூர் 'தடக்' என்ற ஹிந்தி படத்தில் நடித்து கொண்டிருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி, யாருமே எதிர்பார்க்காத அளவு வெற்றி பெற்றது. முதல் நாளிலேயே பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆக மாறியது 'தடக்'.


 இதை தொடர்ந்து ஜான்வியின் தங்கை குஷி கபூருக்கும் சினிமாவில் நடிக்க ஆர்வம் வந்துள்ளது. ஆரம்ப காலத்தில் மாடலிங் மீது மட்டுமே ஆர்வம் கொண்ட குஷி கபூர், இப்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார், என்கிறார் குஷியின் தந்தை போனி கபூர். குஷி கபூரின் முதல் திரைப்படத்தை போனி கபூர் தயாரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP