சாய்ஃப் அலிகானுக்கு மகளாக நடிக்கும் ஒரிஜினல் மகள்!

நடிகை கரீனா கபூரின் கணவர் சாய்ஃப் அலிகான்.
 | 

சாய்ஃப் அலிகானுக்கு மகளாக நடிக்கும் ஒரிஜினல் மகள்!

நடிகை கரீனா கபூரின் கணவர் சாய்ஃப் அலிகான். சாய்ஃபின் முதல் மனைவி அம்ரிதா சிங், இவர்களின் மகள் சாரா அலிகான். வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமாக வரிசைக் கட்டி நிற்கும் இந்த நேரத்தில் சாராவும் அதற்கு விதி விலக்கல்ல. 

இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்கும் கேதர்நாத் படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தை அவர் தொடங்கியிருக்கிறார். இதில் தோனியின் வாழ்க்கை வரலாற்றில் தோனியாக நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக சாரா அலிகான் நடிக்கிறார். இந்தப் படம் வரும் நவம்பரில் திரைக்கு வருகிறது. 

அடுத்ததாக நடிகர் ரன்வீர் சிங்குனுடன் சிம்பா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ரோஹித் ஷெட்டி இயக்கும் இந்தப் படம் டிசம்பரில் வெளியாகுகிறது. இந்நிலையில் தனது மூன்றாவது படத்திற்கு தயாராகி விட்டார் சாரா. இதில் தன் அப்பா சாய்ஃப் அலிகானுடன் இணைந்து நடிப்பது தான் ஸ்பெஷல். இயக்குநர் நிதின் காகர் இயக்கும் அப்பா - மகள் அன்பை மையமாகக் கொண்ட படத்தில் இவர்கள் இருவரும் நடிக்கிறார்களாம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP