ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

திருட்டுக் கதையில் சிவகார்த்திகேயன்! உக்கிரமாகும் பாக்கியராஜ்?! சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் ரிலீசான போது போஸ்கோ பிரபு என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், என்னுடைய கதையைத் திருடியதாக குற்றச்சாட்டை முன்வைத்தார்.
 | 

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் ஹீரோ. இந்தப் படத்தை மித்ரன் இயக்கியுள்ளார். இந்த படத்தின் டிரைலர் ரிலீசான போது போஸ்கோ பிரபு என்பவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில், என்னுடைய கதையைத் திருடி ஹீரோ என்கிற பெயரில் திரைப்படமாக எடுத்து வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!
அந்தக் குற்றச்சாட்டில் தென்னிந்திய  திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் 26.04.2017 நான் பதிவு செய்துள்ள கதையை இயக்குனர் மித்ரன் திரைப்படமாக எடுத்துள்ளார். இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போஸ்கோ பிரபு கூறியுள்ளார். இந்த கதை திருட்டு குறித்து இயக்குநர் பாக்கியராஜ், ஹீரோ கதை திருடப்பட்டது தான் என்று உறுதியளித்துக் கொடுத்துள்ள கடிதம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

கதைத் திருட்டு விவகாரத்தை பாக்கியராஜ் தலைமையில் 19 பேர் கொண்ட குழு விசாரித்து, கதையின் சுருக்கத்தை மித்ரன் மற்றும் போஸ்கோ பிரபு ஆகிய இருவரிடமும் வாங்கியது. கதையின் சுருக்கத்தைப் படித்த பார்த்த 19 முன்னணி கதாசிரியர்கள், இயக்குநர்களும் போஸ்கோ பிரபுவின் கதையும், இயக்குநர் மித்ரனின் கதையும் ஒன்று எனக் கூறி போஸ்கோ பிரபுவுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையையும், அங்கீகாரத்தையும் வழங்குமாறு பாக்கியராஜ் இயக்குநர் மித்ரனிடம் கூறியுள்ளார். 

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

ஆனால் மித்ரனோ இது தன்னுடைய சொந்தக் கதை என தீர்க்கமாக இருந்தார். மீண்டும் விசாரணையை மேற்கொண்ட 19 பேர் கொண்ட குழுவிடம் தன் தரப்பு விளக்கத்தை தர வாய்ப்பு தர வேண்டும் என இயக்குநர் மித்ரன் கூறியுள்ளார். மித்ரனின் கோரிக்கையை ஏற்று அதற்கு பாக்கியராஜ் ஏற்பாடு செய்தார்.

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

மித்ரன் தனது தரப்பு வாதத்தை முன்வைத்தாலும் 19 பேர் கொண்ட குழு அதை ஏற்றுக் கொள்ளவில்லை. கதை திருடப்பட்டதை உறுதிபடுத்தவே செய்தார்கள். 

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

இந்நிலையில் தான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியானது. வேறு வழியின்றி போஸ்கோ பிரபு இயக்குனர் பாக்கியராஜனின் தலைமையிலான 19 பேர் கொண்ட குழுவிடம் அனுமதி பெற்று நீதிமன்றத்தை நாடினார்.  

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

இதுகுறித்து போஸ்கோ பிரபுவுக்கு கடிதம் ஒன்றை பாக்கியராஜ் எழுதியுள்ளார். சர்க்கார், கோமாளி படங்களுக்கு என்ன நியாயம் வழங்கப்பட்டதோ அதையும் தீர்ப்பாக வழங்க முடிவெடுத்து திரு.மித்ரன் அவர்களுக்கு கடிதம் எழுதினேன். ஆனால் 20 நாட்களுக்குள் பொறுப்பான பதில் அளிக்கவில்லை. அதற்குள் படத்தை ரிலீஸ் செய்வதற்கு உண்டான அனைத்து வேலைகளையும் செய்து படத்தையும் ரிலீஸ் செய்து விட்டார்.  அதனால் நீதிமன்றத்தை நாடுவதாக போஸ்கோ பிரபு தெரிவித்தீர்கள். நமது சங்கத்தின் 18 பேருக்கு மேற்பட்டோர் இரண்டு கதைகளும் ஒன்றே என்று உறுதிப்படக் கூறியதை தலைவரான என் மூலம் தங்களுக்கு சாட்சிக் கடிதமாக இதைத் தருகிறோம். உங்களுக்கு நீதிமன்றத்தில் நீதிக் கிடைக்க வாழ்த்துகிறோம் இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் அந்தக் கடிதத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை பாக்கியராஜ் தலைமையில் நடந்த விசாரணை நிகழ்வுகளை ஒன்று விடாமல் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் சமீப காலங்களாய் கதை திருட்டு விவகாரம் அதிகரித்துள்ளது குறித்து முன்னோடிகள் அதிர்ச்சி தெரிவித்து வருகிறார்கள். பெரிய ஹீரோக்களுக்கும், நடிகைகளுக்கும், இயக்குநர்களுக்கும் கோடிக் கணக்கில் சம்பளம் கொடுத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களை இப்படிப்பட்ட இயக்குநர்கள் ஏமாற்றி மோசம் செய்வதாகவே குற்றச்சாட்டை முன்வைத்தார் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஒருவர்.

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

தற்போது ரஜினியை வைத்து ‘தர்பார்’ படத்தை இயக்கியிருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இதற்கு முன்பாகவே ‘கத்தி’ படத்தின் கதையைத் திருடினார் என்று வழக்கு பதியப்பட்டிருந்தது. அதன் பிறகு விஜய் நடிப்பில் மீண்டும், ‘சர்க்கார்’ படமும் கதை திருட்டு விவகாரத்தில் சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அப்போது இயக்குநர் பாக்கியராஜ், பாரபட்சம் பார்க்காமல் நீதிமன்றத்தில் தன் தரப்பு கருத்துக்களை முன்வைத்து அந்த புதிய இயக்குநருக்கு அங்கீகாரமும், இழப்பீடும் வாங்கிக் கொடுத்திருந்தார். ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளராக இருந்த இயக்குநர் அட்லியின் ஒவ்வொரு படமுமே கதைத் திருட்டு விவகாரத்தில் சிக்கி தான் ரிலீசாகின்றது. இவர்கள் இருவருமே கோடிகளில் சம்பளமாக வாங்குபவர்கள்.

ஹீரோ படம் திருட்டு கதை தான்! உண்மையைச் சொன்ன நடிகர் பாக்யராஜ்!

இயக்குநர் பாக்கியராஜின் உறுதியான நிலைப்பாடு கண்டு திரையுலகினர் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். தற்போது சிவகார்த்திகேயன் படமும் கதைத்திருட்டு விவகாரத்தில் சிக்கியிருக்கிறது கோடம்பாக்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோடிகளில் சம்பளம் வாங்கும் இயக்குநர்கள் அதில் சில லட்சங்களை செலவு செய்து உருப்படியான கதையை உரியவரிடம் பேசி அனுமதி பெற்று இயக்கலாமே!?

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP