தமிழ் பெண்கள் இப்படியா: பிக்பாஸ் ப்ரோமோ 2

இன்றைய பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களிடம் தங்களுக்கு பிடித்தவை பற்றியும் பிடிக்காதவை பற்றியும் பேசுகின்றனர். அப்போது ஐஸ்வர்யாவின் சிரிப்பு அழகாக இருக்கும் என்று ரித்விகா கூறுகிறார்.
 | 

தமிழ் பெண்கள் இப்படியா: பிக்பாஸ் ப்ரோமோ 2

இன்றைய பிக்பாஸ் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் மற்ற போட்டியாளர்களிடம் தங்களுக்கு பிடித்தவை பற்றியும் பிடிக்காதவை பற்றியும் பேசுகின்றனர். 

சண்டைகளையும் உருவாக்கிவிட்டு, பின்னர் சேர்த்தும் வைப்பது பிக்பாஸின் வழக்கமாகிவிட்டது. அதன்படி கடந்த மூன்று நாட்களாக போட்டியாளர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதங்கள் நடந்து வந்தது. தற்போது, அதனை தீர்த்து வைக்கும் விதத்தில் ஒவ்வொரு போட்டியாளர்களும் தனித்தனியாக மற்ற போட்டியாளர்கள் பற்றி பேசுகின்றனர். 

இரண்டாவது ப்ரோமோவில், "ரித்விகா யார் சார்பாகவும் பேசாமல், நடுநிலையாக இருக்கிறார்" என்று யாஷிகா கூறுகிறார். பின்னர் பேசும் ரித்விகா, "இந்த வீட்டிலேயே ஐஸ்வர்யாவின் சிரிப்பு தான் அழகானது" என்று கூறுகிறார். 

பின்னர் பேசும் விஜயலட்சுமி, "தமிழ் பெண்கள் அமைதியாக இருக்கலாம். ஆனால் அவர்கள் வீரத்தையும் காட்டியிருக்கிறார்கள். இந்த வீட்டில் போட்டி என்று வரும் போது, நீங்கள் பின்தங்கி இருக்கிறீர்களோ என்று தோன்றுகிறது" என ஜனனி மற்றும் ரித்விகாவை பார்த்து கூறுகிறார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP