தமிழில் ட்வீட் செய்த சன்னி லியோன்

தமிழில் ட்வீட் செய்த சன்னி லியோன்
 | 

தமிழில் ட்வீட் செய்த சன்னி லியோன்

பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தனது படம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்வீட் செய்துள்ளார். தற்போது தமிழ், பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் சன்னி லியோன். தமிழ் திரைபடத்தில்  ஜெய்யுடன் ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியவர் தற்போது வி.சி.வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி ’எனும்  திரைப்படத்தில் இளவரசியாக நடித்து வருகிறார். வீரமாதேவி திரைபடத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் படம் வெளியாகும் தேதி குறித்து எந்த தகவல்களும் இல்லை.

சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறு 'கரஞ்சித் கவுர்' என்ற பெயரில் படமாகியிருக்கிறது. கரஞ்சித் கவுர் என்பதே சன்னி லியோனின் இயற்பெயர் ஆகும். ஹிந்தியில் இயக்கபப்ட்ட இந்த  இணையத் தொடர் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு உள்ளது. தமிழ் மொழியிலும் இணையத்தில் இந்த தொடரை காணலாம். சன்னி லியோன் நடித்துள்ள இந்த இணைய தொடரை இயக்கியுள்ளார் ஆதித்யா தத். தமிழில் 'கரஞ்சித் கவுர்' ட்ரெய்லர் வெளியான நிலையில், சன்னி லியோனும்தன் ட்விட்டர் பக்கத்தில்  தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

“அனைவருக்கும் வணக்கம். தமிழ் உள்பட பல மொழிகளிலும் என் கதை சொல்லப்படுகிறது. நான் மிகவும் ஆவலாக உள்ளேன். இந்தப் படம் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சன்னி லியோன். உலகம் முழுவதும் கரஞ்சித் கவுர் இந்த வாரம் வெளியாக இருக்கிறது. சன்னி லியோனை  முதல் முறையாக இணையதொடரில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP