சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்! 

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்!
 | 

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்! 

உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடிகை சன்னி லியோன், சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பியுள்ளார்.  

கவர்ச்சியை ஆயுதமாக வைத்து இந்திப் சினிமா பட உலகத்தைக் கலக்கி வரும் பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன், தமிழ் சினிமாவையும் ஒரு கை பார்க்கும் முடிவோடு களம் இறங்கியிருக்கிறார். ஏற்கனவே ஜெய் நடிப்பில் வந்த ‘வடகறி’ படத்தில் ஒரு குத்துப் பாடலுக்கு மட்டும் வந்து போன சன்னி லியோன், தற்போது ‘வீரமாதேவி’ படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். வடிவுடையான் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. 

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய சன்னி லியோன்! 

இந்நிலையில் நடிகை சன்னிலியோன், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை உத்தரகாண்ட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு, கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பிறகு சன்னி லியோன் தற்போது வீடு திரும்பியுள்ளார்.  அவரை, சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படியும் டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதன்படி, ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு ரெஸ்டில் இருக்கப்போகிறார் சன்னி லியோன். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP