பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?
 | 

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

"திருச்சியில எனக்கு வேலை கெடச்சப்போ மொத சம்பளத்துல லைஃப் சைஸ் விஜய் போஸ்டர் வாங்கி என் ரூம்ல ஒட்டி வச்சேன்" - இது 'காவலன்' வெளிவந்த காலக்கட்டத்தில் இளம் ரசிகை ஒருவரது ஸ்டேட்மென்ட்.

அதற்கு முன்னரே சில்வண்டுகள் சில 'சிவகாசி' உள்ளிட்ட படங்களின் டயலாக்குகளை சொல்லிக் கொண்டு திரிந்தன. என்றாலும், விஜய்யை பெண்கள் ரசிப்பது வெள்ளித்திரையில் அவர் காண்பிக்கும் ஒருவித கெத்துக்காக மட்டுமில்லை. எதாவது விழா மேடைகளில் ஏறும் அவர், அமைதியாக இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு இறங்கிவிடுவதை கவனித்திருப்போம். இதுபற்றி கேட்ட போது, 'நிறைய பேசிட்டு கஷ்டப்படறவங்களை பார்த்திருக்கேன். அதான் கம்மியா பேசறேன்' என்று ஒரு பேட்டியில் சொன்னார். அதொரு மென்மையான அணுகுமுறையாகவே இருந்தது. இதுவே ஒரு ஈர்ப்பு சக்தியாக இருக்கலாம்.
  
'அடிடா அவள..வெட்றா அவள' மாதிரியான பாத்திரங்கள் இல்லாமல், எளிமையோடும் நேர்மையோடும் கனிவோடும் காதலியை பார்க்கும் பாத்திரங்களில் துவக்கத்தில் நடித்தார். பணிவாக இருந்தார். பெரிய பணக்காரனாக நிறைய பாத்திரங்களை ஏற்கவில்லை. எளிமையாய் உடுத்திக் கொண்டார். மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு துருத்தி நிற்கும் நட்சத்திரமாக இல்லாமல், பல நேரங்களில் தூங்கி எழுந்த பக்கத்து வீட்டு பையன் போலவே கட்சியளித்தார். இந்த விஜயை தான் பெண்கள் நேசிக்கிறார்கள். 

மற்றபடி, தியேட்டரில் பஞ்ச் டயலாகிற்கும், ஸ்டன்டிற்கும், டான்ஸிற்கும் விசிலடித்து 'விஜய்ணா' என கொந்தளிக்கும் பெண்களும் ரசிகைகளும் இருக்கிறார்கள். இது அவர்களுக்கானது இல்லை.

விஜய் செம்ம க்யூட்டாக தெரியும் ஆறு படங்களின் பட்டியல் இது. இத்துடன் உடன்பாடு இல்லாத பட்சத்தில், உங்களுக்கு என்று ஒரு தனி லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். அதை கீழே கருத்துப் பகுதியில் பகிருங்கள். சிம்பிள்.
 
1. பத்ரி
பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

படம் முழுக்கவே ஒரு மந்தகாசத்தோடு தான் விஜய் தெரிவார் என்றாலும், அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்ததால் ஆழப் பதிந்திருக்கும் காட்சி, மமதியோடு ஃபோனில் உரையாடுவது. சில நிமிடங்களுக்குள்ளேயே செம்ம டிராமா பண்ணி, இடையில் கமல், ரஜினி போல மிமிக்ரி செய்வது ரகளை. தப்பு தப்பாக இங்கிலீஷ் பேசுவதும், 'ஜானு ஒனக்கு பொறந்த நாள்' என கேக் வெட்டுவதும் எல்லாம் க்யூட் க்யூட். 

2. குஷி 

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

எஸ்.ஜே.சூர்யா ஒரு நல்ல டைரக்டராக இருந்து இயக்கியதன் விளைவாக இந்தப் படத்தில் விஜய் தோன்றும் போதெல்லாம் கண் முன் எஸ்.ஜே.சூர்யாதான் வருவார். இருந்தாலும், விஜய்க்கு இருக்கும் தனித்தன்மையான மென்மை சில காட்சிகள் தலைதூக்கியபடியே இருக்கும். லெட்டரை சொல்லிக் காட்டி திட்டு வாங்குவது, விஜயகுமாரை காரில் அழைத்து வரும்போது பேசுவது, அம்மாவை அதட்டுவது, அம்மாவை கொஞ்சுவது என பல தருணங்களில் விஜயை ரசிக்கலாம். 

3. ஃப்ரெண்ட்ஸ்

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

வடிவேலு ஒரு பேரலுக்குள் விழுந்து கருப்பு படிமத்தோடு எழுந்ததை பார்த்ததும், அடக்க முடியாமல் உருண்டு புரண்டு சிரிக்கும் விஜயை நினைத்தாலே கண்ணுக்குள் சிரிப்பு வந்துவிடும். மற்றபடி, 'ல் த கா சை ஆ' என பகடி பண்ணி விளையாடுவதை எல்லாம் இப்போது ரசிக்க முடியவில்லை என்றாலும், முதன்முதலில் படத்தை பார்க்கும்போது அதொரு ஈர்ப்பான காட்சியாகவே இருந்தது. 

4. கில்லி

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

'கில்லி' படத்தைப் பற்றி பலரும் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியதை சமூக வலைதளங்களில் பரவலாகக் காணலாம். துருதுருவென நகர்வது, 'அம்மா அப்பா முன்னாடி தண்ணி சாப்பிடறது நல்லா இருக்காது' என்று குழைவது, கூரையை பிரித்து (?!) உள்ளே குதிப்பது என ஃபுல் ஃபன்னான ஒரு கேரக்டர். க்யூட்னஸ் விகிதம் கூடுதல் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ளவும்.
 
5. காவலன்

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

'காவலன்' படத்தில் மறந்து போய் லேடிஸ் ரெஸ்ட் ரூமுக்குள் செல்வதோ, பாடி கார்ட் யூனிஃபார்ம் தான் உடுத்துவேன் என முறுக்கிக் கொண்டு நிற்பதுவோ இல்லை - ஃபோன் காதலியுடன் சண்டை போட்டு, சமாதானமாகி, துள்ளி குதித்து வந்து, அசினிடம் (வெட்கி குழைந்து கொண்டே) ' ஏய் அவ பேசிட்டா' என சொல்லும் காட்சி தான் பெண்கள் பலருக்கும் ஃபேவரைட். எனக்கு யதார்த்தத்திலும் விஜய் அப்படியான ஒரு நபராக இருப்பார் என்று தோன்றுவதால்தான் அந்தக் காட்சி பிடிக்கிறது போலும். 

6. நண்பன் 

பெண்களின் வசீகரன் விஜய்... ஏன்?

படத்தில் ஸ்ரீகாந்த் கொடுக்கும் வாய்ஸ் - ஓவரில் இருக்கும் அதே உற்சாகம்தான் படத்தை நினைக்கும் போதும் வரும். மறுபடியும், இந்த படத்தில் விஜயை பெண்களுக்கு எளிதில் பிடிக்க காரணம் - அவர் ஏற்ற கேரக்டர் யதார்த்தத்தை ஒத்து இருப்பதே. பதற்றம், தயக்கம், வெட்கம், சிரிப்பு என மென் உணர்வுகளை கடத்தியிருப்பது கண்ணுக்குள் நிற்கும். பலருக்கும் ஃபேவரைட் காட்சி என்னவோ, புரொஃபசரிடம் மெசினுக்கு விளக்கம் சொல்லி திட்டு வாங்கிவிட்டு, வெளியே போகச் சொன்னதும் கொஞ்சம் சஞ்சலத்தோடு 'ஓ.. ஏன்?' என்று கேட்பது தான்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP