இதெல்லாம் யுவன் பாட்டு தான் தெரியுமா? #HBDYuvan

யுவன் ரசித்து ரசித்து இசையமைத்த பாடல்கள் ஏராளம். அதில் பல சின்ன படங்கள் (தயாரிப்பு ரீதியாக) என்பதால் அவை கவனம் பெறாமலே போய் விட்டன. அப்படி அதிகம் கவனம் பெறாத யுவனின் செம பாடல்களில் சில பாடல்களின் தொகுப்பு இது...
 | 

இதெல்லாம் யுவன் பாட்டு தான் தெரியுமா? #HBDYuvan

எத்தனை போட்டிகள் வந்தாலும் இன்றும் யுவன் சங்கர் ராஜாவுக்காக படம் பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் மட்டும் குறையவில்லை. கடைசியாக வந்த பியார் பிரேமா காதல் படம் கூட பிக்பாஸ் புகழ் நாயகன் நாயகியை தாண்டி யுவனின் இசை என்ற பிரமாண்டத்துடன் அவரது தயாரிப்பு என்னும் ஸ்வீட்டுடன் சேர்ந்தே வெளியானது.

யுவனின் ரசனையை  பற்றி அவருடன் பணியாற்றிய பலர் பல பேட்டிகளில் கூறி இருக்கின்றனர். முதல் நாள் காட்சிகளில் ஒவ்வொரு சீனையும் ரசிகர்கள்  ரசித்துக்கொண்டு இருந்தாலும், யுவனிடம் இருந்து சின்ன சிரிப்பு மட்டுமே வரும். படம் எப்படி இருக்கு என்ற கேள்விக்கு அவர் அளிக்கும் பதில் “குட்” என்ற வார்த்தை மட்டுமே என்று பல இயக்குநர்கள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அந்த நிலையில் யுவன் முதல் முதலாக தயாரிக்கும் படத்திற்கு எப்படியெல்லாம் கதை கேட்டு முடிவெடுத்திருப்பார்? யுவனின் ரசனையை நிரூபிக்கும் வகையில் பியார் பிரேமா காதல் பெரும் வெற்றியை அடைந்துள்ளது.

ஒரு கலைஞன் முதலில் ரசிகனாக இருக்க வேண்டும். அப்படி யுவன் ரசித்து ரசித்து இசையமைத்த பாடல்கள் ஏராளம். அதில் பல சின்ன படங்கள்(தயாரிப்பு ரீதியாக) அவை கவனம் பெறாமலே போய் விட்டன. அப்படி அதிகம் பெறாத யுவனின்செம பாடல்களில் சில பாடல்களின் தொகுப்பு இது...

தங்க சூரியனே…

தோனி அடிக்கும் கடைசி சிக்சருக்கு பிறகு நிலையாக எப்போதும் ஒலிக்க ஒருபாடல் வேண்டும் என்றால் அரவிந்தன் படத்தின் தங்க சூரியனே பாடலை கூறலாம். ஸ்வர்ணலதா குரலோடு அடிக்கடி ஒலிக்கும் கோரசும் சேர்ந்து செமயான ஹீரோயிச பாடல் இது. கேட்கும் போது கொஞ்சம் இளையராஜாவின் இசைப்போல இந்த பாடல் இருக்கும். 

யுவனின் முதல்படம் என்பதால் ராஜா சாயல் இருக்கலமே என கேட்டு வாங்கி இருக்கவும் வாய்ப்பு இருக்கிறது. இளையராஜாவின் மகனான யுவனுக்கு அவரின் மகன் என்பது தான் தன் வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டு இருக்கும் பெரிய சவால்!

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி...

2001ம் ஆண்டு காதல் சாம்ராஜ்யம் என்ற வெளியானது. அகத்தியன் இயக்கி இருந்த இந்த படத்தில் வெங்கட் பிரபு, ஸ்.பி.பி.சரண், அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் வெளியானதும்... ஏன் இப்படி ஒரு படம் இருப்பது கூட பலருக்கு தெரியாது.

ஆனால் வெகு சிலருக்கு இப்படத்தின் 'இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி" பாடல் பிடித்தமான பாடலாக இருக்கும. இந்த பாடல் காட்சிகளை மட்டும் மன்னிப்பீர்கள் எனில் உங்களுக்கும் இது பிடித்தமான பாடலாக மாறக்கூடும். 

என் காதல் உயிர் பிழைத்துக்கொண்டது...

யுவன் சங்கர் ராஜா முதன்முதலில் தலைக்காட்டிய பாடல் இது. நந்தா, காவேரி நடிப்பில் வெளியான புன்னகை பூவே படத்தில் இடம் பிடித்திருக்கும் பாடல் இது. இப்படத்தில் அமைந்திருந்த 8 பாடல்களும் அருமையாக தான் இருக்கும்.

படம் வெளியான போது பெரிய வரவேற்பு இல்லாததால் பாடலும் பெரிதாக மக்களுக்கு தெரியாமல் போய் விட்டது. 

ஆசை நூறு வகை...

தமிழில் வெளியான முதல் ரீமிக்ஸ் பாடல் இது. குறும்பு படத்தில் இந்த இடம்பெற்று இருக்கும் இந்த பாடல் இன்னும் பல வருடங்களுக்கு பிறகு பார்ட்டியில் ஒலிக்கப்பட்டாலும் கொண்டாட்டமாக இருக்கும். 

கனவே கலைகிறதே...

யுவன் குரலில் ஆன்மா இருக்கிறது என்று ஒரு விருது வழங்கும் மேடையில் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார். அதனை அனுபவிக்காதவர்கள் 'அழகாய் இருக்கிறார் பயமாய் இருக்கிறது' படத்தில் வரும் கனவே கலைகிறதே பாடலை கேட்டு தெரிந்துக்கொள்ளலாம்.

ஹை பிச்சில் ஒலிக்கும் யுவனில் குரல் உடையும் நேரத்தில் ரகுமானின் வார்த்தைகள் உங்களுக்கு புரியும். இந்த படத்தின் பாடல்களை போல படமும் நன்றாக இருந்தாலும், வெளியான போது சரியான வரவேற்பு கிடைக்கவில்லை.

மஞ்சக்காட்டு மைனா!

பிரபுதேவாவுக்கு இசையமைக்கும் போது மட்டும் இசையமைப்பாளர்கள் தனி கவனம் செலுத்த தொடங்கி விடுவார்கள். யுவன் மட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. மனதை திருடிவிட்டாய் படத்தில் அமைந்திருக்கும் அத்தனை பாடல்களும் அட்டகாசம்.

இதில் மஞ்சக்காட்டு மைனா யாஹு காலத்தில் இருந்து டிக் டொக் காலம் வரை பலருக்கும் பிடித்தமான பாடலாக இருக்கிறது. ஆனால் இது யுவன் பாடல் தான் என்பது மட்டும் பலருக்கு தெரியாது.

ஓ... மானனே மானே!

வழக்கம் போல படம் சரியான வரவேற்பு கிடைக்காததால் பலருக்கும் தெரியாமல் போன பாடல் இது. சரத்குமார் நடிப்பில் வெளியான ரிஷி படத்தில் இந்த பாடல் அமைந்திருக்கும்.

இரண்டு வர்ஷன்களில் இருக்கும் இந்த பாடலில் எங்கள் சாய்ஸ் ஹரிஹரன் பாடியது... மற்றொன்றை பாடகி சுஜாதா பாடியிருப்பார். 

என் கண்ணை பிடிங்கிக்கொள் பெண்ணே!

என்ன செய்து கொண்டு இருந்தாலும், உடனே அதனை நிறுத்திவிட்டு பாலா படத்தில் இடம்பெற்ற 'என் கண்ணை பிடிங்கிக்கொள் பெண்ணே' பாடலை கேளுங்கள்... ம்ம்.. யுவன் தின வாழ்த்துக்கள். 

இதே படத்தில் உள்ள 'தீண்டி தீண்டி' பாடலையும் கேட்கலாமே பிரண்ட்ஸ்.

வினோதனே, வினோதனே...

2000ம் ஆண்டுக்கு பிறகு ஒரே கதையை கொண்டு பல படங்களில் நடித்திருப்பார் விஜயகாந்த். அப்படி ஒரு படம் தான் தென்னவன். இந்த படத்தில் வரும் வினோதனே வினோதனே பாடலை கேட்டிருக்கிறீர்களா? 

மலர்களே மலர்களே...

யுவன்+தாமரை+பாம்பே ஜெயஶ்ரீ கூட்டணியை விட அழகானது என்ன இருக்க முடியும். புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தில் ஹீரோயின் இன்ட்ரோ சாங்காக மலர்களே மலர்களே அமைந்திருக்கும்.

கெட்கும் போதே காலம் நேரம் மறந்த ஞான நிலையை அடைவீர்கள்!

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும்...

தீப்பிடிக்க தீப்பிடிக்க பாடல் தீப்போல ஹிட்டாக அதில் இப்படத்தின் மற்ற பாடல்கள் மறைந்து விட்டன. இதில் அமைந்திருக்கும் அனைத்து பாடல்களுமே ஹிட் ரகம் தான், ஆனால் இந்த பாடலில் என்ஸ்ட்ரா யுவனிசம் இருக்கும்.

மேலே குறிப்பிட்டது மட்டும் அல்லாமல் பதினாறு, ஒரு கல்லூரியின் கதை, கண்ட நாள் முதல், புதிய கீதை, கண்ணாமூச்சி ஏனடா என யுவனின் சூப்பர் ஆல்பங்கள் பெரிதாக கவனம் பெறாமலோ அல்லது இது யுவன் பாடல் தான் என்று தெரியாமலோ போய்விட்டன. நேரமிருப்பின் தேடி கேளுங்கள்! #HBDYuvan

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP