ரோஜாவின் ராஜா அரவிந்த்சாமிக்கு இன்று பிறந்த நாள்!

இயக்குனர் மணிரத்னத்தின் மூலம், தளபதி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் அரவிந்த்சாமி. அதன் பின் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அதே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் தான், அரவிந்த்சாமிக்கு மைல் ஸ்டோன் எனலாம்.
 | 

ரோஜாவின் ராஜா அரவிந்த்சாமிக்கு இன்று பிறந்த நாள்!

இயக்குனர் மணிரத்னத்தின் மூலம், தளபதி படத்தில் அறிமுகம் ஆனவர் நடிகர் அரவிந்த்சாமி. அதன் பின் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்தாலும், அதே மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படம் தான், அரவிந்த்சாமிக்கு மைல்ஸ்டோன் எனலாம். 

அந்த படத்தில் நாயகனாக நடித்த அவர், காஷ்மீரில், பிரிவினைவாதிகளிடம் சிக்கி மீளும் கதாபாத்திரத்தால், தமிழர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களிலும் இடம் பிடித்தார். 

ரோஜாவின் ராஜா அரவிந்த்சாமிக்கு இன்று பிறந்த நாள்!

மின்சார கனவு, பம்பாய் போன்ற படங்களில் சாக்லெட் பேபியாகவே காட்சியளித்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் திரைப்பயணத்தை தொடர்ந்தார். தனியொருவன், போகன், செக்ச்சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் தனக்கே உரிய பாணியில் நெகடிவ் ரோலை கையில் எடுத்து, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். 

ரோஜாவின் ராஜா அரவிந்த்சாமிக்கு இன்று பிறந்த நாள்!

ரகுவரின் மறைவுக்குப் பின், தமிழ் சினிமாவில், வில்லன் கேரக்டருக்கு திடீர் பஞ்சம் ஏற்பட்ட நிலையில், சாக்லெட் பேபியாக, ரொமான்ஸ் ஹீரோவாக வலம் வந்த அரவிந்த்சாமி, தன்னால், வில்லனுக்கான இடத்தையும் நிரப்ப முடியும் என நிரூபித்துள்ளார். 

ரோஜாவின் ராஜா அரவிந்த்சாமிக்கு இன்று பிறந்த நாள்!

திரைப்படங்கள் மட்டுமின்றி, டிவி ஷோக்களையும் ஹோஸ்ட் செய்யும் அவர், சிறந்த தொழில் அதிபராகவும் வலம் வருகிறார். அவர் பிறந்த தினம் இன்று, ஜூன் 18. நியூஸ்டிஎம் வாசகர்கள், ரசிகர்கள் சார்பில் அரவிந்த்சாமிக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


newtm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP