தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரி நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை ஏஐஜி கீதா நியமிக்கப்பட்டுள்ளார்.
 | 

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க அதிகாரி நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை ஏஐஜி கீதா நியமிக்கப்பட்டுள்ளார். 

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தேர்தல் முடிந்தும், வாக்கு எண்ணிக்கை நடைபெறாமல் உள்ளது. இதனால் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தலைமை மற்றும் நிர்வாகிகள் இல்லை. ஆகவே தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரியாக பதிவுத்துறை ஏஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு சிறப்பு அதிகாரியாக சேகர் நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது கீதாவை  நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP