பிரபல நடிகரின் மகன் காலமானார்! மெக்காவில் உடல் அடக்கம்!!

பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.இவரின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 | 

பிரபல நடிகரின் மகன் காலமானார்! மெக்காவில் உடல் அடக்கம்!!

பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் தனது 23 வயதில் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

பிரபல நடிகரும் இயக்குனருமான ராஜ்கபூர் அஜித்தின் அவள் வருவாளா, ஆனந்த பூங்காற்றே, ஆகிய படங்களை இயக்கினார். தற்போது திரைப்படங்களிலும், பல சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.  ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். 

                                                      பிரபல நடிகரின் மகன் காலமானார்! மெக்காவில் உடல் அடக்கம்!!

அவரது மகன் ஷாருக் தனது தாயுடன் மெக்காவுக்கு சென்றிருந்தார். பயணம் மேற்கொள்ளும் வழியில் ஷாரூக்குக்கு கடும் சளி, மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது உடலை இந்தியா எடுத்து வராமல் மெக்காவிலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இவரின் மரணம் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP