மாநாட்டில் மீண்டும் சேரும் சிம்பு-யுவன்!- ஜோடியாகும் ராஷி கன்னா

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் அரசியல் படமான மாநாட்டிற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார் என்றும் சிம்புவுக்கு ஜோடியாக ராஷி கன்னா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

மாநாட்டில் மீண்டும் சேரும் சிம்பு-யுவன்!-  ஜோடியாகும் ராஷி கன்னா

மாநாடு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும், ராஷி கன்னா சிம்புவுக்கு ஜோடியாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 

செக்க சிவந்த வானம் படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள வந்தா ராஜாவா தான் வருவேன் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அரசியல் படமாக உருவாக உள்ள இதற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மாநாட்டில் மீண்டும் சேரும் சிம்பு-யுவன்!-  ஜோடியாகும் ராஷி கன்னா

இதனை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்கு பிறகு சிம்புவுடன் யுவன் இந்த படத்தின் மூலம் இணைகிறார். 

மேலும் இந்த படத்தில் ராஷி கன்னா சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP