டைம் பாஸுக்கு தான் ஷாரிக் பழகினாராம்: பிக்பாஸ் பிரோமோ 3

எவிக்டாகி வெளியே சென்ற ஷாரிக் குறித்து ஐஸ்வர்யாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் பாலாஜி.
 | 

டைம் பாஸுக்கு தான் ஷாரிக் பழகினாராம்: பிக்பாஸ் பிரோமோ 3

எவிக்டாகி வெளியே சென்ற ஷாரிக் குறித்து ஐஸ்வர்யாவிடம் பேசிக்கொண்டு இருக்கிறார் பாலாஜி.

பிக்பாஸ் 2 வீட்டில் அடுத்த ஆரவ்-ஓவியாவாக வருவார்கள் என்று ஷாரிக்-ஐஸ்வர்யாவை எதிர்ப்பார்த்தார்கள். ஆனால் அவர்களோ வேறு முடிவு எடுக்க அந்த கதை பாதியிலேயே முடிந்தது. பிக்பாஸ் வீட்டில் இதுவரையில் நடந்த பெரிய பிரச்னையான 'பாலாஜி தலையில் ஐஸ்வர்யா குப்பை கொட்டிய' சம்பவத்திற்கு பின்னால் கூட ஷாரிக் தான் சின்ன காரணமாக இருந்தார். 

இப்படி இருக்க இன்று வெளியாகி இருக்கும் 3வது பிரோமோவில் ஐஸ்வர்யாவிடம் ஷாரிக் குறித்து பேசி கொண்டு  இருக்கிறார் பாலாஜி. "உன் கூட டைம் பாஸுக்கு தான் பழகினான்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப கோபம் வந்தது" என்று பாலாஜி கூறுகிறார். முன்பு ஐஸ்வர்யாவுடன் பழகுவது குறித்து ஷாரிக் இதுபோல பாலாஜியிடம் கூறினாராம்.

தொடர்ந்து, "இந்த வீட்டிற்கு நாம் கரியருக்காக தான் வந்திருக்கிறோம். சொந்தங்கள் உருவாக்குவதற்காக இல்லை" என்று ஐஸ்வர்யாவுக்கு அறிவுரை கூறுகிறார் பாலாஜி. வெளியே சென்ற ஒருவர் பற்றி பேசுகிறார்கள் என்றால், அதற்கு முன் ஏதோ நடந்திருக்கிறது. என்னவாக இருக்கும்?

இதைப் படிச்சிங்களா:

கருணாநிதி மூலம் கேம்... வென்றதா எடப்பாடியார் சாணக்கியத்தனம்?

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP