ஒருவழியாக சென்சார் வாங்க சென்றது 'எனை நோக்கி பாயும் தோட்டா'

கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் நடித்திருக்கும் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் சென்சார் போர்டுக்கு அனுப்பப்பட்டது. எனவே இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
 | 

ஒருவழியாக சென்சார் வாங்க சென்றது 'எனை நோக்கி பாயும் தோட்டா'

தனுஷின் எனை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. 

கடந்த 2016ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோர் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்க தொடங்கினர். இந்த திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டு,மீண்டும் 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்தது. 

இதனையடுத்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடந்து வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதற்கு முக்கிய காரணம இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக சிறப்பாக அமைந்திருந்தது. 

இப்படத்தில் இருந்து முதலில் வெளியான மறுவார்த்தை பேசாதே பாடல் இன்றளவும பலரது ப்ளேலிஸ்ட்டில் இருக்கிறது. மேலும் தர்புகா சிவா இசையில் அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பை பெற்றன. பிறகு படத்தின் டீசரும் வெளியானது. ஆனால் சில காரணங்களுக்காக ரிலீஸ் தேதி மட்டும் தள்ளிப்போய் கொண்டே இருந்தது. 

இந்நிலையில் இந்த திரைப்படம் சென்சார் சான்றிதழ் வாங்குவதற்கு அனுப்பப்பட்டுள்ளதாக நேற்று படக்குழுவினர் தெரிவித்தனர். மேலும் சான்றிதழ் கிடைத்த உடன் அடுத்தடுத்த நாட்களில் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. 

வரும் ஏப்ரல் மாதம் 14ம் தேதி இந்த திரைப்படம் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதே தேதியில் தான் சூர்யாவின் என்ஜிகே திரைப்படமும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP