ஷாருக்கானை இடுப்பில் தூக்கிய சல்மான் கான் - ஜீரோ டீசர்!

நடிகர் ஷாருக் கான் தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
 | 

ஷாருக்கானை இடுப்பில் தூக்கிய சல்மான் கான் - ஜீரோ டீசர்!

நடிகர் ஷாருக் கான் தற்போது 'ஜீரோ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனை இயக்குநர் ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். 'தனு வெட்ஸ் மனு ரிட்டர்ன்ஸ்' படத்தைத் தொடர்ந்து, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு இதனை இயக்கியிருக்கிறார். 

இதில் ஷாருக் கானுடன் அனுஷ்கா ஷர்மா, கத்ரினா கைஃப், அபாய் தியோல் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். அதோடு, சல்மான் கான், தீபிகா படுகோனே, ஶ்ரீதேவி, ராணி முகர்ஜி, கஜோல், ஆலியா பட், கரிஷ்மா கபூர், ஜுஹி சவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறார்கள். ஶ்ரீதேவி வெள்ளித்திரையில் தோன்றும் கடைசி படம் இது என்பது குறிப்பிடத் தக்கது. 

உச்ச நட்சத்திரமாக இருக்கும் கத்ரீனா மீது காதல் வயப்படும் குள்ள மனிதராக ஷாருக்கானும், கற்றல் குறைபாடு உள்ளவராக அனுஷ்கா ஷர்மாவும் நடித்திருக்கிறார்கள். ரம்ஜானை முன்னிட்டு இதன் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு நடனப் போட்டியில், ஷாருக்கான் நடனம் ஆடப் போவதாக அறிவிப்பு வெளியாகிறது. சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் சல்மான் கான் ஷாருக்குடன் இணைந்து நடனம் ஆடுகிறார். இதைப் பார்த்து மக்கள் ஆர்ப்பரிக்கிறார்கள், கடைசியில் சல்மானின் இடுப்பில் ஷாருக் தொற்றிக் கொள்கிறார். தற்போது வெளியான இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அதோடு ரம்ஜான் ஸ்பெஷலாக நாளை வெளியாகும் சல்மானின் 'ரேஸ் 3' படத்தோடு இந்த டீசரையும் இணைத்து ஒளிபரப்பவும் திட்டமிடப் பட்டிருக்கிறதாம். 
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP