சல்மான் கான்- கத்ரீனா கைஃப் பாடல் யூடியூபில் சாதனை !

யூடியூப்பில் 60 கோடி பார்வைகளை கடந்து சல்மான்கான் - கத்ரீனா கைஃப் படத்தின் பாடல் சாதனை புரிந்துள்ளது. இந்த சாதனை புரிந்துள்ள முதல் இந்திய பாடல் என்ற பெருமையும் 'ஸ்வாக் சே ஸ்வக்கத்' பாடலை சேரும்.
 | 

சல்மான் - கத்ரினா கைஃப் ஜோடியாக இணைந்து நடித்துள்ள ஆக்‌ஷன், திரில்லர் படம் 'டைகர் ஸிந்தா ஹே'. 'டைகர் ஸிந்தா ஹே' என்ற பாலிவுட் படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது. பாலிவுட் ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலகெங்கும் ரசிகர்கள் இந்த பாடலுக்கு உண்டு. அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கியிருந்த  இந்த படத்தை யுஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆதித்யா சோப்ரா தயாரித்திருந்தார். 2017 டிசம்பர் 22ம் தேதி ரிலீசான இத்திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் ஆனது.

இந்த சாதனை  குறித்து 'டைகர் ஸிந்தா ஹே' படத்தின் தயாரிப்பாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். "இது ஒரு முழுமையான சாதனை" என்று அந்த ட்வீட் மூலம் தன் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார் ஆதித்யா சோப்ரா.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP