சல்மான்கான் பிரியங்கா சோப்ராவுடன் இணையும் தபு!

பாலிவுட் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தன்னுடைய அடுத்தப் படத்தை ஏற்கனவே அறிவித்து விட்டார். கடைசியாக சல்மான் கானை வைத்து 'டைகர் ஜிந்தா ஹாய்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார்.
 | 

சல்மான்கான் பிரியங்கா சோப்ராவுடன் இணையும் தபு!

சல்மான்கான் பிரியங்கா சோப்ராவுடன் இணையும் தபு!

பாலிவுட் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தன்னுடைய அடுத்தப் படத்தை ஏற்கனவே அறிவித்து விட்டார். கடைசியாக சல்மான் கானை வைத்து 'டைகர் ஜிந்தா ஹாய்' என்ற படத்தை இவர் இயக்கியிருந்தார். ஜாபரின் இந்தப் படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கிறார். படத்திற்கு 'பரத்' எனப் பெயரிடப் பட்டுள்ளது.

பரத், தேவ் குமார் என இரண்டு முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் நடிக்கிறார். இவருடன் பிரியங்கா சோப்ரா மற்றும் திஷா பதானி ஆகியோரும் இணைந்துள்ளதாக சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த லிஸ்டில் இன்னுமொரு முக்கியமான நடிகையும் இணைந்துள்ளார். 

அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி சினிமாக்களில் பல ஹிட் படங்களைக் கொடுத்த தபு தான். இதனை படத்தின் இயக்குநர் அலி அப்பாஸ் ஜாபர் தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார். சல்மான், பிரியங்கா, திஷா மற்றும் தபுவோடு காமெடி கதாப்பாத்திரத்தில் சுனில் க்ரோவெரும் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பை தொடங்கி, அடுத்த வருட ரம்ஜானுக்கு வெளியிடுவது தான் படக்குழுவினரின் திட்டமாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP