மான் வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மான் வேட்டை வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் சென்ற சல்மான்கான் இரண்டு பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.
 | 

மான் வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி!

மான் வேட்டை வழக்கில் சல்மான் கான் குற்றவாளி!

பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மான் வேட்டை வழக்கு கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. 20 வருடங்களுக்கு முன்பு படப்பிடிப்பிற்காக ராஜஸ்தான் சென்ற சல்மான்கான் இரண்டு பிளாக்பக் மான்களை வேட்டையாடியதாக குற்றம் சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது. அவருடன் சேர்த்து பாலிவுட் பிரபலங்கள் சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு கடந்த 1998ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். 

பல வருடங்களாக நடந்து வந்த இந்த வழக்கில் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் சல்மான் கானை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரை வழக்கில் இருந்து விடுவித்தது. 

போதையில் கார் ஓட்டி ஒருவர் பலியான சம்பவத்தில், சல்மான் கான் குற்றவாளி அல்ல என தீர்ப்பளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP