சிறைக்குச் சென்றார் சல்மான்! - என்னாகும் இவரின் படங்கள்?

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த சல்மான் கானின் மான்களை வேட்டையாடிய வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரிப்புகள் நடந்து முடிந்திருந்த நிலையில், சல்மான் கானை குற்றவாளி என அறிவித்தது ஜோத்பூர் நீதிமன்றம்.
 | 

சிறைக்குச் சென்றார் சல்மான்! - என்னாகும் இவரின் படங்கள்?

சிறைக்குச் சென்றார் சல்மான்! - என்னாகும் இவரின் படங்கள்?

சல்மான் கான் நடிப்பில் ரேஸ் 3 உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது அவர் சிறை சென்றுள்ளதால், இந்த படங்களின் நிலை என்ன ஆகும் என்ற கவலை பாலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வந்த சல்மான் கானின்  மான்களை வேட்டையாடிய வழக்கில் இன்று ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோர் மீதும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. பல கட்டங்களாக இந்த வழக்கின் விசாரிப்புகள் நடந்து முடிந்திருந்த நிலையில், சல்மான் கானை குற்றவாளி என அறிவித்தது ஜோத்பூர் நீதிமன்றம். வழக்கில் சம்பந்தப்பட்டிருந்த சாயிஃப் அலிகான், சோனாலி பிந்த்ரே, தபு மற்றும் நீலம் ஆகியோரை விடுவித்தது. 

தண்டனை விபரங்களை மதியம் அறிவிப்பதாக சொல்லியிருந்த நீதிமன்றம், சல்மானுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 10000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஜோத்பூர் சென்ட்ரல் ஜெயிலில் சல்மான் அடைக்கப்பட்டார். 5 ஆண்டுகள் என்பதால் ஜாமினிலும் வெளிவர முடியாத நிலையில், சல்மான் இந்த வழக்கை மேல்முறையீடு செய்வார் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 

தவிர, சஞ்சய் தத்துக்குப் பிறகு நீண்ட சிறை தண்டனை பெறும் முக்கிய நட்சத்திரம் இவர் என்பதால், மொத்த பாலிவுட் நகரமும் கலக்கத்தில் இருக்கிறது. 

என்னாகும் இவரின் படங்கள்?

சல்மான் கான் தற்போது ரெமோ டிஸோஸாவின் ரேஸ்-3, பிரபுதேவாவின் தபாங்-3, அலி அப்பாஸ் ஸாபரின் பாரத், ஆகியப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதில் ரேஸ்-3 வரும் ஜூனிலும், தபாங் அடுத்தாண்டு ஜனவரியிலும் திரைக்கு வர இருக்கிறது. சல்மான் சிறை தண்டனை பெறும் இந்நேரத்தில் பெரும் எதிர்ப்பார்ப்புகளை உண்டாக்கியிருக்கும் இந்தப் படங்களின் நிலைமை என்னாகும் என்பது தான் தற்போது சினிமா ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. மேலும், இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் தான் தொகுத்து வழங்கி வருகிறார். அடுத்த ஆண்டு இதில் சல்மான் கானை வைத்து எடுப்பதா அல்லது வேறு புதிய நடிகரை தேர்வு செய்வதா என்று பிக்பாஸ் டீம் குழப்பத்தில் உள்ளது.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP