மெல்போர்னில் ராணி முகர்ஜிக்குக் கிடைத்த அங்கீகாரம்

இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போர்ன் பட விழா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் அகஸ்ட்டில் நடக்கிறது.
 | 

மெல்போர்னில் ராணி முகர்ஜிக்குக் கிடைத்த அங்கீகாரம்

இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போர்ன் பட விழா ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில்  அகஸ்ட்டில் நடக்கிறது. அதற்கு இந்தியாவில் இருந்து யார் சிறப்பு விருந்தினராக அழைக்கப் பட்டிருக்கிறார் தெரியுமா? பாலிவுட் நடிகை ராணி முகர்ஜி. 

சிறப்பு விருந்தினராக அழைக்கப் படுபவர்கள் தான் இந்தியாவை முன்னிலைப் படுத்தி தேசிய கொடியை ஏற்றுவார்கள். அந்த வாய்ப்பு இந்த வருடம் ராணி முகர்ஜிக்குக் கிடைத்திருக்கிறது. அதோடு 'ஹிச்கி' படத்திற்காக சிறந்த நடிகையாகவும் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆஃப் மெல்போர்ன் பட விழாவில் நாமினேட் ஆகியிருக்கிறார் ராணி முகர்ஜி. 

இந்த வாய்ப்பு தனக்குக் கிடைத்தது மிக பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார் ராணி. தேசிய கொடி ஏற்றுவது தனக்கு மிகவும் பெருமை எனவும், அதுவும் வெளிநாட்டில் தன் நாட்டுக் கொடியை ஏற்றுவது ரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இந்த நிகழ்ச்சி ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி சனிக்கிழமை மெல்போர்னில் நடக்கிறது. ஒவ்வொரு வருடமும் இந்த ஃபிலிம் ஃபெஸ்டிவலில் சுதந்திர தினமும் கொண்டாடப் படும் என்பது கூடுதல் தகவல்.  

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP