கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா!? தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு!!

இயக்குனர் சிவா கார்த்தி நடித்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு அஜித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினி
 | 

கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா!? தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு!!

இயக்குனர் சிவா கார்த்தி நடித்த சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார், இதனை தொடர்ந்து அஜித்தை வைத்து வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என நான்கு அஜித் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.இந்த நிலையில் தற்பொழுது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துவரும் தலைவர் 168 திரைப்படத்தை இயக்கி வருகிறார்.இதன்மூலம் சிவா முதன்முறையாக ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ரஜினியின் 168வது  திரைப்படமான இப்படத்தை  சன் பிக்சர்ஸ்  தயாரித்து வருகிறது, டி.இமான் இசையமைக்கிறார். 

கமல் பாணியில் ரஜினி படத் தலைப்பா!? தலைவர் 168 படத்தின் பெயர் அறிவிப்பு!!

இந்நிலையில் இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து டைட்டில் லுக் வீடியோவையும் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளனர்.இதில் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இன்று வெளியான டைட்டில் லுக் வீடியோவில் ரஜினியின் கெட்டப்பைப் பார்க்கும் ஆவலில் காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே  மிஞ்சியது. ரஜினியின் முகமே தெரியாமல் டைட்டில் லுக் வீடியோவை வெளியிட்டிருந்தனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP