சொர்க்க பூமியில் படமான ஆலியாவின் ராஸி

இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கி வரும் படம் 'ராஸி'. இதில் ஆலியா பட், விக்கி கெளஷல் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் இதனை தயாரிக்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு திருமணமாகி செல்லும் ஆலியா பட், பாகிஸ்தானை உளவு பார்த்து, அங்கிருந்து இந்தியாவுக்கு தகவல் கொடுக்கிறார்.
 | 

சொர்க்க பூமியில் படமான ஆலியாவின் ராஸி

சொர்க்க பூமியில் படமான ஆலியாவின் ராஸி

இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கி வரும் படம் 'ராஸி'. இதில் ஆலியா பட், விக்கி கெளஷல் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் தர்மா புரொடக்‌ஷன்ஸ் இதனை தயாரிக்கிறார்கள். இந்தியா - பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு திருமணமாகி செல்லும் ஆலியா பட், பாகிஸ்தானை உளவு பார்த்து, அங்கிருந்து இந்தியாவுக்கு தகவல் கொடுக்கிறார். இதனை விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இயக்கி இருக்கிறார் மேக்னா. 

சமீபத்தில் இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது. படம் வருகிற மே 11-ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. 

இதற்கிடையில் தர்மா புரொடக்‌ஷன்ஸ் திரைக்குப் பின்னால் என்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. சொர்க்கப்பூமியான காஷ்மீரில் ஷூட்டிங் நடக்கும் போது, இந்த வீடியோ எடுக்கப் பட்டுள்ளது. படத்தில் தனது அனுபவங்களை அந்த வீடியோவில் மேக்னா பகிர்ந்துள்ளார். 

தவிர, இந்த டிஜிட்டல் உலகத்திலிருந்து விடுபட்டு அமைதியாக தான் இருப்பதாக ஆலியா பட்டும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP