இந்திக்கு செல்கிறது ப்ரேமம்... ஹீரோ யார் தெரியுமா?

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி சக்கைப் போடு போட்ட படம் 'ப்ரேமம்'. இயக்குநர் அல்ஃபோன்ஸ் புத்ரன் இயக்க நிவின் பாலி, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த மூன்று கதாநாயகிகளும் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்கள். இளைஞர்களுக்குப் பிடிக்கும் வகையில் ரொமான்டிக் டிராமாவாக இருந்ததால் பலரும் இந்தப் படத்தைக் கொண்டாடினார்கள்.
 | 

இந்த வெற்றியைத் தொடர்ந்து நிவின்பாலி, சாய் பல்லவி கதாப்பாத்திரங்களில் நாக சைத்தன்யா மற்றும் ஸ்ருதி ஹாசன் நடிக்க தெலுங்கிலும் 'ப்ரேமம்' ரீமேக் செய்யப்பட்டது. ஆனால் எதிர்ப்பார்த்த அளவு அங்கு வெற்றி பெறவில்லை. ரசிகர்களால் சாய் பல்லவி இடத்தில் ஸ்ருதி ஹாசனை ஏற்றுக் கொள்ள முடியாததும் இதற்கு ஒரு காரணம். 

தற்போது தெலுங்கைத் தொடர்ந்து இந்தியிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது. இயக்குநர் அபிஷேக் கபூர் இயக்க, அர்ஜுன் கபூர் நாயகனாக நடிக்கிறாராம். அவருடன் நடிக்கப் போகும் மூன்று ஹீரோயின்கள் யாரென்று தெரியவில்லை. தெலுங்கு மாதிரி சொதப்பி விடக்கூடாது என்பது தான் தற்போது ஒரிஜினல் ப்ரேமம் ரசிகர்களின் விருப்பம். 

சாய் பல்லவியையே இந்திக்கும் கூப்பிட்டுருவாங்களோ...

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP