ரவுடி பேபியை தொடர்ந்து மீண்டும் கலக்க வருகிறார் யுவன்!

ரவுடி பேபி பாடல் 10 கோடி வியூஸ்க்கும் மேல் யூடியூப்பில் பெற்று உலகம் முழுவதும் ஹிட்டாகியுள்ள செய்தியுடன், யுவன் ஷங்கர் ராஜாவின் அடுத்த படமான 'கண்ணே கலைமானே'வின் பாடல்கள் நாளை மறுநாள் வெளியாகும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
 | 

பியார் பிரேமா காதல், சண்டக்கோழி 2, மாரி 2 உள்ளிட்ட படங்களின் சூப்பர்ஹிட் பாடல்கள் மூலம், கடந்த ஆண்டு மீண்டும் கோலிவுட்டின் புருவங்களை உயர்த்தினார் யுவன் ஷங்கர் ராஜா. மாரி 2-வின் ரவுடி பேபி பாடல், யூடியூப்பில் 10 கோடி வியூஸ்க்கும் மேல் பெற்று, உலக அளவில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள கண்ணே கலைமானே படத்தின் பாடல்கள் வரும் 24ம் தேதி வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள 'கண்ணே கலைமானே' பிப்ரவரி 1ம் தேதி ரிலீசாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், யுவன் இசையில் படத்தின் பாடல்கள் மீது தற்போது எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துள்ளது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP