வைகை புயலின் இடத்தை நிரப்பும் யோகி பாபு?!

வைகை புயல் வடிவேலுக்கு மாற்று யோகி பாபு என ரசிகர்களால் கொண்டாடப்படும் யோகி பாபுவின் 'தர்மபிரபு' படம், வடிவேலுவின் படங்கள் போல ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 | 

வைகை புயலின் இடத்தை நிரப்பும் யோகி பாபு?!

'தர்மபிரபு' படத்தை  முத்துக்குமரன் இயக்கியுள்ளார். ஶ்ரீவாரி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். முழுக்க, முழுக்க காமெடியாக எடுக்கப்படும் இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு ஹீரோவாக நடித்துள்ளார்.  

தவிர, தர்ம பிரபு படத்தின் மூலம், வசன கர்த்தாவாகவும் களம் இறங்கியிருக்கிறார் யோகி.  எற்கெனவே, இத்திரைப்படத்தின்  பாடல் மற்றும் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.  மேலும் இந்த படம் வரும் ஜூன் 28ம் தேதி திரைக்கு வர உள்ளதாகவும், "தர்மபிரபு" வின் சேட்டிலைட் உரிமத்தை சன் டிவி பெற்றுள்ளதாகவும் படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில்,வைகை புயல் வடிவேலுக்கு மாற்று என ரசிகர்களால் கொண்டாடப்படும் யோகி பாபுவின் இந்த படம், வடிவேலுவின் படங்கள்  போல ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP