தேர்தலில் யாருக்கு ஆதரவு? : சஸ்பென்ஸ் வைக்கும் விஜய்சேதுபதி !

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை கூற முடியாது என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.
 | 

தேர்தலில் யாருக்கு ஆதரவு? : சஸ்பென்ஸ் வைக்கும் விஜய்சேதுபதி !

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் எந்த அணிக்கு ஆதரவு என்பதை கூற முடியாது என்று நடிகர் விஜய்சேதுபதி தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியும், ஐசரி கணேஷ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமிகள் அணியும் போட்டியிடுகின்றன. 

இந்த நிலையில், இந்த தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு நடிகர் விஜய்சேதுபதி அளித்த பேட்டியில், ‘ நடிகர் சங்கத்தில் உள்ள இரண்டு அணியில் ஒரு அணி கூறிய கருத்து நன்றாக உள்ளது. ஆனால், எந்த அணிக்கு ஆதரவு அளிக்கப்போகிறேன் எனக் கூற முடியாது. சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் உள்ளதால் தேர்தல் நல்ல படியாக நடக்க வேண்டும்’ என்று பேட்டியளித்துள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP