Logo

'எந்தன் கண்களை காணோம்!' - கண்ணே கலைமானே படத்தின் சிங்கிள் ட்ராக்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் "எந்தன் கண்களைக் காணோம்" என்ற பாடல் தற்போது வெளியாகியிருக்கிறது
 | 

'எந்தன் கண்களை காணோம்!' - கண்ணே கலைமானே படத்தின் சிங்கிள் ட்ராக்

தயாரிப்பாளரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தற்போது நடித்து முடித்திருக்கும் திரைப்படம் 'கண்ணே கலைமானே'. இதனை இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியிருக்கிறார். இதில் உதயநிதிக்கு ஜோடியாக தமன்னா நடித்திருக்கிறார்.

தர்மதுரை படத்தைத் தொடர்ந்து சீனு ராமசாமியும், தமன்னாவும் இதில் இரண்டாவது முறையாக இணைந்திருக்கிறார்கள். இவர்களுடன் வடிவுக்கரசி, வசுந்த்ரா கஷ்யாப் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். 
 
தனது ரெட் ஜெயண்ட் ஃபிலிம்ஸ் மூலம் உதயநிதியே இந்த 'கண்ணே கலைமானே' படத்தைத் தயாரித்திருக்கிறார். கவிஞர் வைரமுத்துவின் வரிகளுக்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். 

தற்போது இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் 'எந்தன் கண்களை காணோம்' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். 

இந்தப் படம் பிப்ரவரியில் வெளியாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP